ஜனாதிபதியிடம் இப்படியொரு, திட்டம் இருந்ததா..?
(மீள்பார்வை)
பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளின் பின்னணியில் கோத்தாபாய ராஜபக்ஷவை பாராளுமன்றத்துக்குள் நுழைவிப்பதற்கான ஏற்பாடுகள் இருப்பதாக கொழும்பு டெலிகிராப் வெளியிட்ட செய்திகள் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் தோல்வியடையும் பட்சத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவை அந்த இடத்துக்கு நியமிப்பதற்கும், கோத்தபாய ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு நுழைவிப்பதற்கும், அதன் மூலம் இரண்டாம் தடவையாக ஜனாதிபதியாவதற்கும் பிரதமராக கோத்தாபாயவை நியமிப்பதற்கும் ஜனாதிபதி திட்டமிட்டிருந்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
கோத்தபாய தரப்பினருக்கும் ஜனாதிபதி மைத்திரி தரப்பினருக்கும் இடையில் கடந்த வாரம் சீனாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் இது தொடர்பிலேயே அமைந்திருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினரையும் வேறு வேறு அழைப்பின் பேரில் சீனா அழைத்திருந்தாலும், இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டிருந்தன.
அதுரலியே ரதன தேரர், எஸ்.பி.திஸாநாயக்க, ஷிரால் லக்திலக்க, ஹர்ஷ குமார நவரத்ன, கலாநிதி லலித் சமரகோன் (செயலாளர், தேசிய பொருளாதார கவுன்சில்) ஆகியோர் இந்தச் சுற்றுலாவுக்காக அழைக்கப்பட்டிருந்த போதும், அதுரலியயே ரதன தேரர், எஸ்.பி. திஸாநாயக்க தவிர்ந்த ஏனையோர் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த தேசிய அரசாங்கம் இப்படியே இரண்டு கட்சியும் ஒருவரை ஒருவர் வீத்துவதர்க்கு சதி செய்து கொண்டே இருக்கும் இந்த ஐந்து ஆண்டு முடியும் வரை.
ReplyDeleteஇவரின் ஆட்சி கடைசியிலே இராணுவ புரட்சியிலே தான் முடிய போகிறது!
ReplyDeleteஇறைவன் மிகப்பெரிய சதிகாரன்
ReplyDeleteIF the situation with MY3 is like this... How come they will punish the past government criminals ?
ReplyDeletePunishment is only public who commit crimes at small scale... BUT for politician who commit crimes at mega scale... they will protect each other. as they keep the judge and courts in hand.