நீண்டதொரு நெடிய உறக்கம்...
உறங்குவதும்,
உறங்கவைக்கப்படுவதும்
இங்கேதான் நடக்கிறது
உறங்குவோரை நாம் 'தலைவர்கள்'
என்கிறோம் - உறங்கவைக்கப்படுவோர்
மக்கள் எனப்படுகின்றனர்
அவர்கள் செலவாகும் , பேச்ச்சாற்றலும்
உள்ள நல்ல உறக்கத்திலிருப்போருக்கு
தலைமைகளை கொடுக்கின்றனர்-இன்னும்
சிறந்த உறக்கம் களைந்து விடாமல்
பஞ்சு மெத்தைகளும், தடித்த போர்வைகளும்,
குளிரூட்டப்பட்ட அறைகளும்
நீண்ட ஆயுளுடன் நிம்மதியாய்
உறங்க குடும்பத்திற்கே அளித்துள்ளனர்,
ஏனேனில் யாரேனும் ஒருவராவது
எழுந்து பிறர் உறக்கம் கலையக்கூடால்லவா?
மக்கள் எனப்படுவோருக்கு
மீடியா எனும் மாய வலை
வீசப்பட்டது - அதில்
சினிமாவும் , சில்லறை சீரியல்களும்,
கூத்தாடிகளும், விபச்சாரிகளும்
கூடிக்கொள்ளும் பெரிய எஜமான்
நிகழ்ச்சிகளும் - போதாதென்று
இசை எனும் நரம்பியல் போதைப்பொருளும்
இவற்றுடன் வழிப்படுத்தப்படா
சமூக வலைத்தளங்களும்
கொடுக்கப்பட்டு ஒவ்வொரு
சிறுபான்மையும் உலகம் முழுவதும்
உறங்க வைக்கப்படுகிறது
அத்துடன் முடிவதில்லை,
நிர்வாண ஊடகங்கள்
நிம்மதியை இருப்பதில்லை
துவேஷம் எனும் மிருகத்தை
மூர்க்கமாய் தட்டியெழுப்பும் - அரசியலும்,
பெரும் வியாபாரங்களும்
சிறுபான்மையிடமும், பெரும் பான்மையிடமும்
ஒரே நேரத்தில் விபச்சாரம் செய்யும்
துவேஷம் எனும் மிருகத்திடம்
துப்பாக்கிகளும் வழங்கப்படும் - அது
அணை உடைத்துப்பாயும்
சாக்கடை வெள்ளமாய்
ஊரெல்லாம் அழித்த்தோடும்
அருவெறுப்பேயில்லாமல்
மாதவிடாய் பெண்களையும்
மறக்காமல் வன்புணரும்,
இரண்டு சடலம் பெண்ணாயிருந்தாலும்
அதன் பூப்பெண்போட்டெலும்பும்
உடைந்து நொறுங்கும் வரை.......
மேலும் அந்த மிருகம்
பின் பிடரியில் ஓங்கியடிக்கப்பட்டு
அதன் வெறி கொண்ட வரை
தெறித்து ஓடவைக்கப்படும்
பாவம், உறங்குபவர்களுக்கென்ன
உறக்கம் கலையாத மாளிகை
உறங்க வாக்கப்பட்டவர்கள்
சின்ன பின்னமாகும் வரை அந்த மிருகம்
அடக்கப்படுவதில்லை- ஏனெனில்
அரசியலின் தேவை, அடுத்த தேர்தலுக்கு ,
ஊடகங்களின் தேவை செய்திகளுக்கும்,
சூடான விவாதங்களுக்கும்,
பெரும் வியாபாரங்களில் தேவை
வார்த்தைகள் பொறிக்கப்பட்ட விற்பனைக்கு
இவ்வாறுதான் - ஒவ்வொரு
தேசத்திலும் மாற்ற முடியாத
மக்களின் யகலையெழுத்து எழுதப்படுகிறது
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும்
அதன் நிறம் கருப்பு- வெள்ளை
சிரியாவிலும், இரானிலும் இன்னும் பல
இஸ்சலாமிய தேசங்களிலும் அது ஷீயா- சுன்னி
ஆபிரிக்க தேசங்களில் குலம்,கோத்திரம்
ரோண்ஹிங்கியாவில் குடியுரிமையற்ற
நாடோடிகள்- இலங்கையிலும்
மறக்கலையோ, தம்பியோ
ஆனாலும், அதற்கொரு பொதுப்பெயருண்டு
'இசஸ்லமிய தீவிரவாதம்'
இதனை எழுத்துக்களுக்கும்
ஒரு நோக்கமுண்டு - அது
உணர்தலும், உணப்படுத்தலுமாகும்
உணர்தலின் உந்துகைதான்
இந்த வார்த்தைகளும் சேர்க்கைகளும்,
உணரப்படுத்தலின் அடிக்கல்
இந்த சிறிய முயற்சி
-Shamla Rizan-
Post a Comment