உள்ளூர் சபைகளில், முடியாமல் போகுமா..?
மக்கள் எதிர்நோக்கியிருக்கும் நாளாந்த பொருளாதார, சமூக சிக்கல்கள் நாளுக்கு நாள் சிக்கல் நிலையை கடினப்படுத்துகின்றன. ஒரு வசதிப்படுத்தும் , இலகுபடுத்தும் ஆட்சி ஒன்றை அவர்கள் எல்லா மட்டங்களிலும் எதிர்பார்க்கின்றனர்.
கணக்குக்காட்டுதல் என்பது ( being accountable ) செயல்களுக்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகும்.
பணம் என்பது அரசியல் , ஆட்சி நிலைகளில் முதண்மை பெறுகிறது.
பணம் சரியான ஒழுங்கில் முகாமைக்குற்படும் போது, வருவாய், செலவு முறை, பயன் , மீதம் என கணக்குக்காட்டும் நிலை வெளிப்படையாக இருக்கப்போகிறது.
இந்த வெளிப்படை நிலை, அறமும், மக்கள் நலனும் பாதுகாப்பானதாக இருப்பதை வெளிப்படுத்தும்.
ஏன் கணக்குக்காட்டுதல் இன்று பேசப்படுகிறது ? எனப் பார்க்கலாம்.
ஊழல் என்பது தார்மீக மற்றும் அரசியல் சார்பான பிரச்சனை மட்டுமல்ல. அது ஒரு பொருளாதார அனர்த்தமாக இருக்கப்போகிறது என்கிறார்.
- எழுத்தாளர் சீன் ஹேகன்
இன்று ஊழல் கூர்மையான கவனத்தை பெற்ற உலகப் பிரச்சனையாக மாறிவிட்டது.
உலகின் பல பாகங்களில்,
அண்மைய உயர் நிலை அரசியல் மற்றும் அதிகாரிகளின் ஊழல் தொடர்பான வழக்குகள் ஒழுக்க சீர்கேடு மற்றும் அறத்திற்கு முரணான நிலையை படம்பிடித்துக்காட்டுகிறது.
பல நாடுகளில் பொருளாதார / சமூக சமத்துவமின்மை மற்றும் நம்பிக்கை மோசடி என்பவை நீதிக்கு முரணான நிலையை புலப்படுத்தி நிற்கின்றன.
ஒழுங்கமைந்ததாக உருவெடுத்துள்ள ஊழலானது அரசியல், அறம் சார் பிரச்சனையாக மட்டுமல்லாமல், பொருளாதார அனர்த்தமாக உருவெடுத்துள்ளது.
அரசு ஒன்றின் நிதி மற்றும் நாணயக்கொள்கை, சந்தை ஒழுங்குமுறை, நிதித்துறை மேற்பார்வை, சட்டவாட்சி போன்ற பணிகளை குறைத்து கீழறுத்துவிடும் விடயமாக ஒழுங்கமந்த ஊழல் என்பத ஆக்கிவிடும் தன்மை வாய்ந்தது.
அது உள்ளடக்கிய ( inclusive ) மற்றும் நிலைபேறு ( sustainability ) போன்றவற்றை அரசின் பணிகளில் இருந்து இல்லாமலாக்கிவிடும்.
உதாரணத்திற்கு நிதிக்கொள்கையை எடுத்துக்கொள்ளலாம்.
வருமானத்தை அதிகரித்து, பொது செலவுகளையும் வழங்கி மக்கள் நலனை பேண வேண்டியது ஒரு அரசாங்கத்தின் பணியாகும்.
ஆனால், ஊழல் தாராளமாக இருக்கும் ஒரு நாட்டில், வரி செலுத்தும் நிலையை ஊழல் பாதிக்கிறது.
நம்பிக்கையின்மை அரசின் மீது அதிகரித்து வரி இணக்கத்தை அது பாதிக்கிறது.
வருவாய் குறைந்த நிலையில் அரசாங்கம் கடன் சுமையை கட்டவும் முடியாமல் நிலையற்ற நிலைக்கு ஆளாகிறது.
செலவு தொடர்பில் பார்த்தால், ஊழலானது , தேவை குறைந்த , வீணான முதலீடுகளாக செலவளிந்து கல்வி, சுகாதாரம் போன்ற முதண்மை விடயங்களை முக்கியமற்றதாக ஆக்குகின்றன.
தேவையற்ற செலவீனம், அரசாங்க சேவைகளில் அதிகளவு தங்கியுள்ள ஏழைகளை தூரமாக்கி, வறுமை நிலையை இன்னும் வலுப்படுத்துகின்றன.
தனியார் முதலீடுகளை தடுப்பதாக ஊழல் ஒழுங்கமைந்துள்ளது. அல்லது ஒழுங்கமைந்த ஊழல் தனியார் முதலீடுகளை தடுக்கிறது.
முதலீடுகளுக்கான வரியாக ஊழல் இன்று கோரப்படுகிறது.
மொத்தத்தில் முதலீடுகளை ஊழல் சீரலிக்கிறது.
பொருளாதார ரீதியான எல்லா மக்கள் தரப்பையும் உள்ளடக்கிய ஒரு வளர்ச்சியை ஊழல் தடுக்கிறது. தேவையான கடன் ஒன்றை முறையாக பெறும் நிலையையும் இது சீரலிக்கிறது. இல்லாமல் செய்கிறது.
சமூக நிலையை சீர்குலைப்பது ஊழல்தான்.
இளயவர் மத்தியில் அமைதியின்மை, ஆயுத மோதலை உருவாக்கிவிடும். ஏனெனில், தொழில், வருமான வேறுபாடு, போதாமை என்பவற்றை ஊழல் தத்ரூபமாக உருவாக்கிவிடும்.
சரி, ஊழல் எப்படி இல்லாமல் போகும்?
வெளிப்படையான ஆட்சி முறை, சட்டத்திற்குற்பட்ட ஆட்சி, பொருளாதார மீள் நிர்மாணம் மற்றும் நிறுவனங்களை கட்டியெழுப்புதல் என்கின்ற 4 அம்சங்கள் பொதிந்த முழுமையான விடயம் ஒன்று அதற்குத் தேவைப்படுகிறது.
ஊழல் என்பது இரகசியமும், ஒளிபுகா கட்டமைப்பையும் கொண்டது.
தகவல்களை துல்லியமாக வழங்கும் முறை மற்றும் பணத்திற்குக் கணக்குக் காட்டும் சரியான முறையில் மட்டுமே அது வேரருக்கப்படும்.
இலஞ்சம் செலுத்தும் தனியார்கள் உட்பட, பெறுனராக இருக்கும் அரச கட்டமைப்புகள் எல்லாமே ஒரு புதிய கட்டமைப்பில் கண்காணிப்புக்கு உள்ளாகும் போதுதான் ஊழலின் ஆரம்ப நிலை வெளிப்படும்.
தொழில்நுட்ப முறைமையோடு, ஒரு பொருளாதார / கணக்குக் காட்டும் விடயத்தில் ஒரு புதிய மீள் நிர்மாணம் அவசியப்படுகிறது . இது ஊழலை தடுக்க ஆரம்பித்துவிடும்.
கடைசியாக நிறுவன மீள் நிர்மாணம் தேவைப்படுகிறது.
ஒரு கொள்கைமிக்க , ஒரு தலைமைத்துவம், அரச / தனியார் ஆதிக்கமற்ற தனிமனிதர்கள், ஆட்களுக்கு அடிபணியா சட்ட நடைமுறை, நிபுணத்துவமிக்க துறைசார் ஆளுமைகள் என்கின்ற ஒரு குழுமம்தான் ஊழலை ஒடுக்க ஒரே வழி.
இந்தத் தலைமைத்துவ அம்சங்களுக்கு, குழுமத்திற்கு உதாரணங்கள் உலக அளவில் நிறையவே இருக்கின்றன.
சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ போன்ற தொலைநோக்கு மிக்க தலைவர்கள் ஒரு சான்று.
ஆட்சி ஒழுங்கில் , உள்ளூர் சபைகள் ஒரு முதண்மையானதும், நாளாந்த மக்கள் வாழ்வோடு நேரடியாகத் தொடர்புபடுவதும் என்பதால் , கணக்குக் காட்டும் பொறிமுறை இங்கே இருந்து வலுவாகத் தொடங்குவதே ஊழல் மனோனிலை வலுவிழக்க தொடங்கும் முதல் நிலையாக இருக்கப்போகிறது.
மக்களாகிய நாம் சிவில் அமைப்புகளாக நின்று கேள்வி கேட்கும் நிலையே, எமது பிரதிநிதிகள் எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நிலையை வலுப்படுத்துவதாக அமையும்.
கணக்குக்காட்டுதல் மூலம் அறமும், விருத்தியும் உருவாகுவதோடு, பொருள் முதல் சகவாழ்வு வரை உயிர் பெற்று, நிம்மதி நிலை ஒன்றை தோற்றுவிக்கலாம் என்பதை சகல மட்டங்களும் உள்ளுணர்வில் வைத்து நோக்க வேண்டும்.
Post a Comment