சுதரந்திரக் கட்சிக்கு பேரிடி
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் தொழிற்சங்க பலத்தை இழக்க நேர்ந்துள்ளதன் காரணமாக வருமானத்தில் பாரிய இழப்பை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதன் காரணமாக சுதந்திரக் கட்சியிலிருந்து விடுபட்டு சுயாதீனமாக இயங்கவுள்ளதாக சுதந்திர தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த அரசாங்கம் தொழிலாளர் விரோதப் போக்கில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது. தேசிய அரசாங்கத்தை விட்டு விலகுமாறு சுதந்திரக் கட்சிக்கு பல்வேறு தடவைகள் அழுத்தம் கொடுத்தும் அதனை யாரும் பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில் கட்சி அரசியலை விட்டு விலகி சுயாதீனமாக செயற்பட சுதந்திர தொழிலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் அனைத்து நிறுவனங்களிலும் எமது தொழிற்சங்கம் சுயாதீனமாக இயங்கும் என்பதுடன், சுதந்திரக் கட்சி சார்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாது என்றும் லெஸ்லி தேவேந்திர அறிவித்துள்ளார்.
தொழிற்சங்கம் சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்துள்ளதன் காரணமாக அதன் அங்கத்தவர்களிடமிருந்து கிடைத்து வந்த பாரிய வருமானம் இனிவரும் காலங்களில் சுதந்திரக் கட்சிக்கு கிட்டாமல் போகும் நிலை ஏற்படவுள்ளது.
அதன் காரணமாக அக்கட்சி எதிர்வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment