Header Ads



பிரித்தானிய ராணி, முஹம்மது நபியின் வம்சாவளியா..? மொராக்கோ நாளேடு ஆய்வறிக்கை


பிரித்தானிய ராணி எலிசபெத்  முஹம்மது நபியின் வம்சாவளி என வரலாற்று ஆய்வாளர்களின் புதிய ஆய்வறிக்கை ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளர்கள் பிரித்தானிய ராணி எலிசபெத்தின் 43 தலைமுறையினரை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். முதன் முறையாக இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 1986 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

ஆனால் பலரும் மறந்திருந்த குறித்த தகவல் தொடர்பில் மொராக்கோ நாளேடு ஒன்று சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Earl of Cambridge என்பவருக்கு ரத்த உறவு என்பதும், முஹம்மது நபியின் மகள் பாத்திமாவுக்கு ரத்த உறவு என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆய்வறிக்கையை சில வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், மரபு வழி பதிவுகளை சுட்டிக்காட்டி எகிப்தின் முன்னாள் grand mufti Ali Gomaa ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தில் உடம்பில் ஓடும் ரத்தம் முஹம்மது நபியினுடையது என்பது பிரித்தானியாவில் ஒரு சில பேருக்கே தெரிந்த ரகசியம்,

இது அங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய விடயம் எனவும் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்ட நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, 11 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டின் Seville பகுதியை ஆட்சி செய்த இஸ்லாமிய இளவரசி Zaida-ன் நேரடி உறவினர் தான் பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் ராணி எனவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளவரசி Zaida பின்னர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். Seville அரசர் Al-Mu'tamid ibn Abbad என்பவரின் நான்காவது மனைவி தான் இந்த இளவரசி Zaida.

இவர்களது மகன் Sancho-ன் நேரடி உறவினர் ஒருவர் 11 ஆம் நூற்றாண்டில் Earl of Cambridge-ஐ மணந்து கொண்டார்.

இந்த ஆய்வறிக்கையை பெரும்பாலான பிரித்தானியர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்தாலும், குறித்த ஆய்வானது இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களையும் பிரித்தானியாவையும் இணைக்கும் பாலம் என மொராக்கோ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

6 comments:

  1. நபிகளாரின் இரத்தமும் அவரது தந்தை அப்துல்லாவின் உடம்பில் ஓடியதும் ஒரே இரத்தம் தான் ஆனாலும் அது முஸ்லிம்களுக்குப் பெருமையாக இருக்கவில்லை காரணம் அவர் நரகத்தில் என்று நபியே சொல்லிவிட்டார் !
    எலிசபெத்தின் இரத்தம் நபியின் இரத்தம் என்று ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் அதில் எமக்கு கடுகளவும் பெருமையில்லை அவர் இஸ்லாத்தை ஏற்கும் வரை .

    ReplyDelete
  2. நபியுடைய இரத்தமும் மஹா ராணியின் இரத்தமும் ஒரே மாதிரி என்றால் இதில் என்ன பெருமை உள்ளது இரத்தம் ஒன்றாக இருந்தால் ஈமான் கொள்ளாமல் சொர்க்கம் போக முடியுமா?பிரித்தானியாய மக்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் இதில் புதுமை ஒன்றும் இல்லை.மடையர்கள் இருக்கும் வரை ஏமாற்றும் துரோகிகளின் செயல் நடந்து கொண்டுதான் இருக்கும்.
    ان اكرمكم عن الله اتقاكم

    ReplyDelete
  3. Aboo Lahab and Abdullah (father of Muhammed sal) were brothers too? But there is nothing to do with this blood relation.

    ONLY who follow the teachings of Muhammed (sal) will be proud to be in Paradise.

    NOTE: Above article has long intention to raise the FAMILY LOVE of Muhammed (sal) and then to LOVE SHIA Imaams hopefully.

    YES: We sunni Muslims love the family of Muhammed (sal) more than any one, that is why in tashahud, we make salawat on his family. BUT This love for only those who follow the teachings of Muhammed (sal) and not who commit grave worship and shirk ( even if they are form the family Muhammed, we do not love them).

    Allah please guide us in correct path of salafus Saliheens who stick to the way of your religion firmly.

    ReplyDelete
  4. Yes you are absolutely right Brother A. Rasheed..

    ReplyDelete
  5. @ محمد سلمي
    நபியவர்கள் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை இறந்து விடுகிறார். 

    அவர் வாழ்ந்த காலம்  'அஹ்லுல் பித்ராஹ்' என்ற இஸ்லாமிய அழைப்பைப் பெறாத மக்கள் வாழ்ந்த காலம்.

    அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்:

    "எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை."
    (அல்குர்ஆன் : 17:15)

    எனவே இறை தூதர் எவரும் அனுப்பப் படாத காலத்தில் வாழ்ந்த நபிகளாரின்  தந்தை  நரகில் வேதனை செய்யப் படுவார் என்பதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

    நபியவர்கள் தமது தந்தை நரகத்தில் என்று சொன்னது உண்மையாயின் அதற்கான ஆதாரம் என்ன?

    நபியவர்களின் ரத்தம் மகாராணியின் உடம்பில் இருந்தால் அதற்காகப் பெருமைப்பட வேண்டியவர் மஹாராணியும் அவரது மக்களுமே தவிர முஸ்லிம்களல்ல.

    இஸ்லாத்துக்கு வெளியே இருக்கும் இந்த ரத்தத் தொடர்பாளர்கள்கள்,  தாம் அதனை அறிந்து கொண்டும், இறுதி நபியின் தூதை அவரைப் பின்பற்றுவோர் மூலம் அறிந்தும் அதனை ஏற்காவிட்டால் அவர்கள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில்  'முர்தத்' என்ற நிலையில் நோக்கப்பட வேண்டியவர்கள் என நினைக்கிறேன்

    ReplyDelete
  6. ஆதம் அலை அவர்கள் தோன்றிய காலத்திலுருந்தே இஸ்லாம் தோன்றியதாகவும் நபி ஸல் அவர்கள்
    காலத்தோடு அதுமுற்றுப்பெற்று விட்டதாகவும் ஏகோபித்த கருத்து எம்
    மத்தியில் உள்ளது எனவே நபி ஸல்
    அவர்களின் தந்தை அவர்கள் அந்த கால
    இஸ்லாத்தில் இருந்திரிக்கலாம், இருந்திருக்க வேண்டும். சகோதரர் கூறும் கருத்தை பார்த்தால் நபி ஸல்
    அவர்களின் நுபுவ்வத்துக்கு முற்பட்ட
    காலத்தில் வாழ்ந்த அத்தனை பேரும்
    நரகவாதிகள் என்று எடுத்துக் கொள்ள
    வேண்டியுள்ளது.இது முற்றிலும் தவறானது.
    மகாராணி அவர்கள் நபி ஸல் அவர்களின் வாரிசு என்பது பெரிய விடயமல்ல ஏனெனில் நாம் எல்லோரும்
    ஆதம் அலை அவர்களின் வழித்தோன்றல் என்றால் நபி ஸல்
    அவர்களின் வழித்தோன்றலும் அதன்
    உள்ளடக்கமேயாகும்.

    ReplyDelete

Powered by Blogger.