பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம் - தயாசிறி
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம். எங்களுக்கு முதுகெலும்பு இருக்கின்றது எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதால் சுதந்திரக் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் தயாசிறி குறிப்பிட்டார்.
முதுகெலும்பில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
தனியாக பயணிக்க வேண்டும் என்பதை கட்சியின் தலைவரே தீர்மானிக்க வேண்டும். இதன்படி 2 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர கட்சியின் கூட்டத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது எனவும் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி தெரிவித்தார்.
Post a Comment