குடிநீர் போத்தல் தொடர்பில், அறிக்கை கோரும் ஜனாதிபதி
குடி நீர் போத்தல்களின் விலை மற்றும் தரம் தொடர்பில் உடனடியாக அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நிலவும் வரட்சியான காலநிலையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக சில வர்த்தகர்கள் அதிக விலையில் மற்றும் தரமற்ற குடிநீர் போத்தல்களை விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
வரட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் சிறப்பு பேச்சுவார்த்தையொன்று இன்று மதியம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
வரட்சியான காலநிலை காரணமாக 9 மாவட்டங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 235 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
We are not living in Desert Country. The price of Water is TOOO much. Compare to Desert Saudi Arabia water more expensive in Sri Lanaka.
ReplyDelete