தமிழ்த் கூட்டமைப்பிடம் ரணில் மண்டியிட்டார் - விமல்
தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து ரணிலை தோற்கடிக்க போவதாக கூறி இரண்டு வரைபடங்களுடன் மைத்திரியிடம் சென்றவர், நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது காணாமல் போனதாக அந்த முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி ஒழுங்கு செய்திருந்த கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மீண்டும் மண்டியிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத ரீதியான 10 கோரிக்கைக்கு இணங்கியே கூட்டமைப்பின் 16 வாக்குகளை ரணில் பெற்றுக்கொண்டுள்ளார்.
மூன்று மாதங்களில் சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருதல், வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தை திரும்ப பெறுவது, காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம் தொடர்பான சட்டம், காணாமல் போவதை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம், காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கை துரிதப்படுத்தல் என்பன அவற்றில் அடங்கும்.
இவை கடந்த 2013 ஆம் அண்டு சிங்கப்பூரில் உள்ள அர்ஜூன் மகேந்திரன் வீட்டில், வைத்து உலக தமிழர் பேரவையிடம், அமைச்சர் மங்கள சமரவீர வழங்கிய உறுதிமொழி எனவும் விமல் வீரவங்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment