Header Ads



சக்தி, தொலைக்காட்சிக்கு…

நேற்று பாராளுமன்றத்தில் பிரதம மந்திரிக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸவால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து UNP ஆதரவாளர்கள் நாடளாவ ரீதியில் அவர்களது வெற்றி கொண்டாட்டங்களை கொண்டாடினார்கள்.

இதன் போது MTV,MBC நிறுவனத்துக்கு முன்னால் UNP ஆதரவாளர்கள் தமது வெற்றிக்கொண்டாங்களை தீவிரமாக கொண்டாடியுள்ளார்கள். பின்னர் பொலிஸார் அவர்களை அவ்விடத்தில் இருந்து அப்புரப்படுத்தியுள்ளார்கள்.

இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் MTV,MBC நிறுவனத்திக்கு ஒரு சிறு சேதம் கூட ஏற்படவில்லை…

இந்த விடயத்தை சக்தி நிறுவனம் தமது நிறுவனத்தை உடைத்து தகர்த்தது போன்று மணித்தியாளத்துக்கு மணித்தியாளம் விஷேட செய்தி போட்டு பில்டப் காட்டுகிறது

இந்த சம்பவத்தை வெளிநாட்டு ஊடகம்கள் கண்டிப்பதாக Braking news வேறு…

ஏன் இந்த விடயத்தை எழுதுகிறேன் என்றால் அன்மையில் கண்டியில் பாரிய இனப் பழிவாங்கள் நிகழ்ச்சி நிரல் ஒன்று நடைபெற்றது இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் ஒட்டுமொத்த குரலென பீத்திக்கொள்ளும் சக்தி (சதி) நிறுவனம் கண்டி கலவர விடயத்தில் நடந்து கொண்ட விதம் இலங்கையின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மனதையும் புன்படுத்தியது சக்தி ஒரு பக்க சார்பான நிறுவனமென முஸ்லிம்களில் பெறும்பாலானவர்கள் முடிவு செய்து விட்டார்கள்!

நேற்று UNP ஆதரவாளர்கள் ஏன் உங்களது காரியாளயத்துக்கு முன் வெற்றிக்கொண்டாட்டங்களை ஏன் கொண்டாடினார்கள் அங்கு வந்தவர்களுக்கு என்ன பைத்தியமா? அவர்கள் முட்டாள்களலா? இல்லை உங்கள் நிறுவனம் நடந்து கொண்ட விதமே அதற்கு காணமாக அமைந்தது…

நேற்றை தாக்குதல் தொடர்பாக இன்று செய்தியில் சக்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் இவ்வாறு ஒரு செய்தி தெரிவித்தார்…

கடந்த காலத்தில் MTV,MBC நிறுவனம் UNP யின் கட்டிசிக்காக செயட்பட்டதாகவும் அவர்களின் கட்சியை சீர் செய்ய வேண்மென முயற்சித்ததாகவும் சொன்னார்,

ஆமாம் அவ்வாறுதான் செய்தீர்கள் பிரதம மந்திரியை தலைமை பதவியில் இருந்து தூக்கிவிட்டு சஜீத் பிரமேதாசவுக்கு கொடுக்க வேண்மென பல செய்திகளை போட்டீர்கள் UNPக்குள் ஒரு பிளவை ஏற்படுத்த முயற்சித்தீர்கள் இறுதியில் அது தோல்வியில்தான் முடிந்தது.

பிரதம மந்திரிக்கு எதிரான பிரேரணை விடயத்தில் பிரதம மந்திரிக்கு எதிராக செயட்பட்டீர்கள் அதற்காகத்தான் UNP ஆதரவாளர்கள் உங்கள் நிறவனத்துக்கு முன்னால் வெற்றிக்கொண்டாட்டம் கொண்டாடினார்கள் என்பது கசப்பான உண்மைகளாகும்.

ஊடக நிறுவனம் என்பது சுயாதீனமாக இயங்க வேண்டிய ஒன்றாகும் அரசியல் கட்சிகளை சீர் செய்வது அரசியல் கட்சிகளின் வேளையாகும்.

மஹாராஜா நிறுவனத்து அரசியல் கட்சிகளை சீர் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிரது என்றால் மஹாராஜா நிறுவனத்துக்கு பின்னாலும் அரசியல் ஒன்றே உள்ளது என்பதும் கசப்பான உண்மையாகும்.

ஊடக தர்மம் என்பது மக்களின் தர்மமாக இருக்க வேண்டுமே தவிர எந்த கட்சியை வளர்ப்பதற்காகவோ? வீழ்த்துவற்காகவோ? இருக்கக் கூடாது தமிழ் பேசும் மக்களின் குரலென இலங்கையில் நீங்கள் வைத்துள்ள பெயர் முஸ்லிம்களின் குரலையும் சேர்த்துத்தான் பெயர் வைத்துள்ளீர்கள் என்ற உரிமையில்தான் உங்களுக்கு எதிராக இதை எழுதுகிறேன் மாறாக வேறு ஏதாவாது பெயரை பயன்படுத்தினால் நாங்கள் உங்கள் நிறுவனத்தை கண்டுகொள்ள மாட்டோம். 

ஆகையால் உங்கள் நிறுவனம் எப்போது நடுநிலையாக தமிழ் பேசும் மக்களின் குரலாக நீதிக்காக பேசுகிறதோ ? அன்றுதான் இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் குரல் சக்தியெனை ஏற்றுக்கொள்வோம்!

முஹம்மட் பர்சாத்

7 comments:

  1. @Mohammed varsad,
    ஆமாம் அவ்வாறே முஸ்லீம் தேசிய சேவை ரேடியோவின் நடுநிலைமையையும் எடுத்து உரையுங்கள்

    ReplyDelete
  2. இது முஸ்லீம் மக்களுக்கு நன்கு தெரிந்த விடயமே.. இதை புதிதாக எடுத்துரைப்பதால் அவர்களின் நடைமுறயில் ஏதும் மாற்றம் ஏற்படுமென நான் நினைக்கவில்லை.
    தமிழ்மக்களெண்று கூறுவதை வைத்து முஸ்லீம்களையும் சேர்துத்தான் சொல்கிறார்கள்என நாமாக கருத்திட முடியாது; சிலவேளை தமிழர்கள் தமிழ் மொழிக்குரியவர்கள், சோனகர்கள் சோனிமொழி பேசாமல் தமிழை பேசுவது அவர்களின் தவறு என ஒரு தத்துவமும் அவர்களிடமிருக்க நிறைய வாய்ப்ளுபுகளும் உண்டு.
    கிறிஸ்மஸ், புதுவருடம், சித்திரை பிறப்பு,பொங்கல், தீபாவளி போண்ற பண்டிகைகளுக்கு திரையின் மூலயில் பண்டிகையைகுரிய ஒரு Animation ஐ தொடர்ந்து ஓடவிடுவர். ஆனால் இஸ்லாமியர்களின் இரு பெரும் பண்டிகைகளுக்கு இவ்வாறு குறிப்பிட்டு எதனயும் செய்வதில்லை என்பது மிகத்தெளிவான பிரிவினைபாராட்டும் ஒரு செயெல்பாடே.

    ReplyDelete
  3. very good article , well said

    ReplyDelete
  4. Maharaja can not change the POLITICAL Leader

    ReplyDelete
  5. ஊடக தர்மத்திற்கு அப்பாற்பட்ட ஊடகம் தான் "சக்தி" "சிரச" என்பதைத் தெரிந்து கொண்டும் இன்னும் ஏன் அதற்கு ஆதரவளிக்கின்றனர்???

    ReplyDelete
  6. இங்க பாருடா! யாரு நடுநிலைமை பற்றி பேசுவது என்று.

    முஸ்லிம்கள் சம்பந்தமான தவறான செய்திகளை சக்திtv போட்டதாக நான் பார்க்கவும் இல்லை, அறியவும் இல்லை.


    ReplyDelete
  7. @ Imran,
    I agree with your statement and seriously i can understand your valuable. Shakthi TV is entrtainment based media to attract the ppl. These kind of media misguide tamil community in such a way you expressed.

    ReplyDelete

Powered by Blogger.