Header Ads



தேர்தலுக்கு ரெடியாகுங்கள் - யானைகளுக்கு ரணில் உத்தரவு

தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

‘என்னைப் பதவி கவிழ்ப்பதன் மூலம், சிறிலங்கா அதிபரின் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தைப் பதவி கவிழ்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பின்னர், ஐதேக அடைந்துள்ள மிகப்.பெரிய வரலாற்று வெற்றி இது.

ஒற்றுமையின் மூலம் வெற்றி பெறலாம் என்பதை காட்டியிருக்கிறோம். இனி அடுத்ததாக, மாகாணசபை, நாடாளுமன்ற, அதிபர் தேர்தல்களுக்கு தயாராக வேண்டும்.

அதிகாரத்தைக் கைப்பற்ற முனையும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் திசைதிருப்பல்களுக்கு அகப்படாமல், ஒற்றுமையுடன் தேர்தல்களுக்கு தயாராக வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. Do some good things to the country before going to election. Otherwise, same old story of the results of the local govt. election.

    ReplyDelete
  2. அழுத்கமவில் மஹிந்த கொஞ்சம் கொடுத்து போனாரு இவரு திகனயில் வட்டியும் முதலுமா கொடுத்தாரு இனி 2020 பிறகு இன்னும் ஏது குறையா வைத்து சென்று இருந்தால் அது எல்லாம் பெற தயாரா இவருக்கு வாக்கு அளிக்கவும்.

    ReplyDelete

Powered by Blogger.