Header Ads



பாராளுமன்றத்தை சுற்றி, கலகம் அடக்கும் படையினர் குவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்க எதிராக நாடாளுமன்றத்தில் மகிந்த அணியினரால் முன்வைக்கப்பட்ட அவநம்பிக்கைப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்று வருகிறது.

இன்று முற்பகல் இந்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தன, மத்திய வங்கியின் முறிமோசடி குற்றத்தை அடிப்படையாக கொண்டே இந்த அவநம்பிக்கைப் பிரேரணை முன்வைக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

பிரதமரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்ஜுன் மகேந்திரனின் செயற்பாடு, இலங்கையின் வங்கித்துறையில், அரசியலில், பொருளாதாரத்தில், மத்தியவங்கியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பிரதமரே பொறுப்பு கூறவேண்டும். அதன்அடிப்படையிலேயே அவருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை முன்வைக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே எதிர்கட்சிகளுக்கு பிரதான சவாலாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

20 வருடங்களுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவினால் எதுவும் முடியாது என சுவரொட்டிகள் அச்சிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இந்த 20 வருடங்களாக ரணில் விக்ரமசிங்கவே எதிர்கட்சிகளுக்கு சவாலானவராக இருக்கிறார்.

எதிர்கட்சி தலைவர் கூறியது போல் இந்த பிரேரணையானது பிரதமரின் ஊடாக ஜனாதிபதியையே இலக்கு வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை , இன்று இடம்பெறவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு காரணமாக நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் , நாடாளுமன்ற வளாகத்திற்கு கலகம் அடக்கும் படையினர் குவிக்கப்பட்டுள்ளர்.

2 comments:

  1. அங்கும் காடையர்கள் இருக்கிறார்களா?

    ReplyDelete
  2. angu kadayarkal illaiyenral naattil engume kadayarkal illai enrahividum???

    ReplyDelete

Powered by Blogger.