கண்டி வன்முறைகள், பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் கைதாவார்
கண்டிப் பிரதேசத்தில் திகன, தெல்தெனிய மற்றும் அயல் பிரதேசங்களில் இடம்பெற்ற வன்செயல்களுடன் தொடர்புபட்ட பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இதற்காக அனைத்து விசாரணைகளையும் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்பு பூர்த்தி செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார் என சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்;
கண்டிப் பிரதேச வன்செயல்கள் தொடர்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவின் வாக்குமூலங்கள் ஏனைய பிரிவுகளுடனும் தொடர்புபட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் விசாரணைகளை உடன் பூர்த்தி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டதும் பாராளுமன்ற உறுப்பினரின் கைது தொடர்பில் பொலிஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.
ARA.Fareel
இந்த பல்லவியத்தான் கடந்த கலவரம் முதல் கூறிக் கொண்டு இருக்கின்றார்களே தவிர
ReplyDeleteகைது செய்வதாக இல்லை.