முஸ்லிம்களுக்கு எதிரான கண்டி வன்முறை மறக்கப்படுகிறது - அமைச்சரவையில் பைஸர், கபீர் சீற்றம்
(ஐ. ஏ. காதிர் கான்)
கண்டி - திகன வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்றும், இல்லாதுபோனால் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக விண்ணப்பம் செய்யப்படும் என்றும் அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, கபீர் ஹாஷிம் ஆகியோர் கூட்டாக இணைந்து குரல் எழுப்பியுள்ளதுடன் கடுமையாகவும் விமர்சித்துள்ளனர்.
அமைச்சரவைக் கூட்டம் நேற்று (03) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றபோதே, அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, கபீர் ஹாஷிம் ஆகியோர் ஒன்றிணைந்து இவ்வாறு விமர்சித்துள்ளனர்.
அமைச்சர்கள் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டதாவது,
கண்டி - திகன வன்முறை தொடர்பாக அரசாங்கம் இன்னும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்தும், திருப்திகரமான பதில்கள் எதுவும் தராதது குறித்தும் எமது கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்தவேண்டும். உரிய நடவடிக்கைகளையும் எடுக்க முன்வர வேண்டும். பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் குறைபாடுகள் தொடர்பிலும் விசாரிக்கப்படல் வேண்டும். இல்லையெனின், உச்ச நீதி மன்றில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக விண்ணப்பம் செய்யப்படும் என்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா இதன்போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் தெரிவித்தார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், வாழ்வாதாரங்கள், கட்டிடங்கள், வீடுகள் மற்றும் சொத்துக்களின் சேத விபரங்கள் ஆகியன பற்றியும் போதுமான இழப்பீடுகள் வழங்கப்படுவதுடன் அவற்றிற்கு முன்னுரிமைகளும் வழங்கப்படல் வேண்டும். அத்துடன், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பிரசாரங்களுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான முஸ்லிம்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் தொடர்ந்தும் திரும்பத் திரும்ப ஏற்படாது என்பதையும் அரசாங்கம் இச்சந்தர்ப்பத்தில் உறுதி செய்யவேண்டும் என்றும், இதன்போது அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டார்.
ஆஹா இது ஜெனிவா விடயத்தை மறுப்பதற்கான அனுகூலமாகவும் இருக்கும்
ReplyDeleteமுஸ்லீம் கட்சி, முஸ்லிம்களின் தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் றிஷாத்தும், ஹக்கீமும் பேசாமல் இருக்கையில் இவர்கள் அதிலும் பாயிஸ் முஸ்தபா அவர்களுக்கு எமது நன்றிகள். இன்னும் எல்லா முஸ்லீம் எம்பி களையும் இணைத்துக் கொண்டு மாபெரும் அழுத்தம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேட்கொள்ளப்பட வேண்டும் என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம்.
ReplyDeleteNo point just shouting. If you guys have back born resign, go home and see how it is? Dont bully SL Muslims.
ReplyDeleteஐந்தாவது பந்தி முழுமையில்லை மீண்டும் முழுமை படுத்தி வதிவிடவும்
ReplyDeletewaste of energy and time
ReplyDeleteசைபர் முஸ்தபாவின் நாடகத்தின் மற்றுமொரு சிறிய
ReplyDeleteகாட்சி!