சடலங்களை வைத்து ஆர்ப்பாட்டம்
இரத்தினபுரி பல்லேபத்த பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது இரண்டு சடலங்களை ஆர்ப்பாட்ட இடத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆம் திகதி எம்பிலிப்பிட்டி – இரத்தினபுரி பிரதாக வீதியில் தெமட்டகல பகுதியில் பஸ் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளான போது உயிரிழந்த இருவரின் சடலங்களே இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் 34 மற்றும் 38 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி,எம்பிலிப்பிட்டி வீதியூடான போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்ட
இதனை தொடர்ந்து பஸ் உரிமையாளர் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் நஷ்ட்டயீடு வழங்குவதாக தெரிவித்தன் பின்னர் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
Post a Comment