இன்று காலையில் இருந்த பீதி; எமக்கு தற்போது இல்லை - நவீன்
கூட்டு எதிர்க்கட்சியினர் கொண்டு வந்துள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் கையெழுத்திட்ட சிலர் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் இன்று -04-நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வழக்குகளில் சிக்கியுள்ள சிலர் தலையிட்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளனர்.
தாம் எதிர்நோக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வாக அவர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கருதுகின்றனர். இதன் மூலம் வேறு விளையாட்டை ஆட அவர்கள் எதிர்பார்த்துள்ளனர.
காலையில் இருந்த பீதி எமக்கு தற்போது இல்லை. தோற்கடிப்பதில் எமக்கு சவால் இல்லை. கையெழுத்திட்டவர்கள் கூட நாடாளுமன்றத்தில் இல்லை. கையளித்த தலைவரும் இல்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்போர் அரசாங்கத்தில் இருக்க முடியாது என்பதை நினைவூட்ட வேண்டும். முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் கேலிக்குரியன.
அர்ஜூன் மகேந்திரன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கக் கூடிய அனைத்து தகுதிகளை கொண்டிருந்தார் எனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment