தொண்டை கிழிய கத்திய ஹரீஸ், இன்று துரோகம் செய்தார்
-றிபான் -
இன்று -02- பிற்பகல் கல்முனை மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகளின் போதே பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் வழிகாட்டலில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களின் கைககளில் உள்ள வாக்கு எனும் ஆயுதம் மூலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதுகில் குத்தியுள்ளார்.
இன்று காலை முதல் கல்முனை மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகளின் போது முஸ்லிம்கள் மேயராகவும், பிரதி மேயராகவும் தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதற்காக ஹரீஸ் அமைச்சர் றிசாட்டுடன் நிந்தவூர் தோம்புக் கண்டம் ஹோட்டல் மற்றும் அமைச்சர் றிசாட்டின் மாமாவின் (நிந்தவூர் பசீல்) வீட்டிலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இதன்போது என்ன உடன்பாடு காணப்பட்டது என்பது வெளியாகவில்லை. இப்பேச்சுவார்த்தைகளின் போது நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான ஏ.எம்.அனிசீல் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பி;டத்தக்கது.
இதே வேளை, நேற்று இரவு கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் அஸாத்சாலி தோம்புக்கண்டம் ஹோட்டலில் சாய்ந்தமருது தோடம்பழக் குழுவினருடன் பேசினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரை மேயராகக்குவதற்குரிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இதன்போது சண்டைகளும், சர்ச்;சைகளும் ஏற்பட்டன. இறுதியில் முடிவுகள் காணப்படவில்லை. இதே வேளை, இன்று பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகமும், தோடம்பழத்தில் வெற்றியீட்டிய 09 சுயேட்சைக் குழு உறுப்பினர்களும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். இதன்படி இன்றைய அமர்விற்கு தாங்கள் சமூகமளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பின்னணியில் இன்று 2.30மணிக்கு கல்முனை மாநகர சபைக்குரிய மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகள் இடம்பெற்றன. இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம் ஒருவர் மேயராகத் தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்புக்கு வாக்களித்தார்கள். றக்கீப் 22 வாக்குகளைக் பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்;ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஹென்றி மகேந்திரனுக்கு 07 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன.
புpரதி மேயர் தெரிவுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் எம்.முபீத், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கே.சிவலிங்கம், தமிழர் ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் காத்தமுத்து கணேஸ் ஆகியோர்கள் போட்டியிட்டார்கள். இவர்களில் காத்தமுத்துக் கணேஸிற்கு முஸ்லிம் காங்கிரஸின் 12 உறுப்பினர்கள் உட்பட 15 வாக்குகளைக் பெற்றுக் கொண்டார். கே.சிவலிங்கம் 07 வாக்குகளையும், முபீத் 07 வாக்குகளையும் பெற்றுக் கொண்டார்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சமூக நோக்குடன் செயற்பட்ட போதிலும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களும், பிரதி அமைச்சர் ஹரீஸும் அவ்வாறு செயற்படவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் பிரதி மேயராக தெரிவு செய்யப்படக் கூடாதென்ற போட்டி அரசியலை மாத்திரம் மனதிற் கொண்டு செயற்பட்டுள்ளார்கள். இத்தெரிவுகள் நடைபெற்ற போது பிரதி அமைச்சர் ஹரீஸ், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் நபீல் உட்பட்டோர் சமூகமளித்து இருந்தார்கள்.
கல்முனை முஸ்லிம்களிடம் இருந்து பறிபோகப் போகின்றது என்று தொண்டை கிழிய மேடைகளில் கத்திய ஹரீஸ் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு சொல்லி வைத்தது போன்று காத்தமுத்து கணேஸிற்கு வாக்களிக்க வைத்துள்ளார்.
கல்முனையின் துரோகி யார் என்பதனை கல்முனை முஸ்லிம்கள் முடிவு செய்ய வேண்டும். கல்முனை பறி போகப் போகின்றதென்று ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர் இன்று கல்முனையின் துரோகி யார் என்பதனை அடையாளப்படுத்தியுள்ளார்.
கல்முனைக்கு பல பிரச்சினைகள் உள்ளன. எல்லைப் பிரச்சினை முக்கியமானது. இனிவரும் காலங்களில் கொடியேற்றப் பள்ளிவாசல் வீதியிலிருந்து பிரித்துக் கொடுக்க வேண்டியேற்படும். கல்முனைக்கு பல துரோகங்களைச் செய்துள்ள ஹரீஸின் துரோகங்களில் இது மிகப் பெரியதாகும்.
இதனைக் கூட முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் சாணக்கியத்தின் வெற்றி என்பார்கள். கல்முனை மாநகர சபையினை காப்பாற்றி விட்டதாகவும் கொக்கரிப்பார்கள்.
துரோகிகளே.. உங்களை கிழக்கு முஸ்லிம்கள் என்றும் மன்னிக்க போவதில்லை. முஸ்லிம்களின் கண்ணை குடைய காத்திருக்கும் இனவாதிகளிடம் முழு சமுதாயத்தையும் அடகு வைத்துவிட்டீர்கள். கல்முனை கையைவிட்டு இனவாதிகளிடம் வீழ்வதற்கான வாசற்படியை திறந்து விடீர்கள். வரலாற்று நெடுகிலும் துரோகிகளாக கணிக்கப்படுவீர்கள். இவர்கள் நிச்சயமாக டயஸ்போறாக்களின் எச்சை எலும்பிற்காக வடகிழக்கு இணைப்பையும் எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் செய்வார்கள்.
ReplyDeleteதுரோகிகள் எங்கும் இல்லை நமக்குள்ளேயே இருக்கிரார்கள
ReplyDeleteகல்முனை மாநகர சபைக்கு பிரதி
ReplyDeleteமேயராக தமிழர் ஒருவர் தெரிவானது
வரவேற்கத்தக்கதும் நியாயமானதுமாகும்.
றிபான் அவர்களே, தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு இணக்கப்பாட்டுடன் செயட்படுவதில் எந்த தவறையும் நாம் காணவில்லை. வாக்களிப்பில் தமிழர்கள் ஒருபகுதியினர் சட்டத்தரணி ரகீப்புக்கே வாக்களித்துள்ளார்கள். அதே நேரம் இப்பிரதேசத்து பெரும்பாலான முஸ்லிம்கள் யானைக்கே வாக்களித்துள்ளார்கள் அதாவது ஹரிசையே ஆதரித்துள்ளார்கள். ஆகவே அதட்கான பலனை அவர்களே அனுபவிக்கட்டுமே. அதே நேரம் இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒரு நாகரிகமான ஜனநாயக மக்கள் சேவையை இந்த மாநகர சபைக்குள் முன்னெடுக்கலாமே.ஆனால் கல்முனை முஸ்லிம்களின் ஒற்றுமையை எந்த கடுகளவும் கருத்தில் கொள்ளாமல் மாபெரும் பிரதேசவாதிகளாவும், பிரதேச துவேஷிகளாகவும் மதிகெட்டு அலையும் தோடம்பளக்காரர்களாலேயே இம்மாநகரசபை முஸ்லிம்களுக்கு மாபெரும் அரசியல், பொருளாதார, எல்லை பிரச்சினைகள் ஏட்பட்டுள்ளது என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ReplyDeleteGtx, கல்முனை முஸ்லிம்கள் துரோகிகள் அல்ல, புத்திசாலிகள்!
ReplyDeleteதமிழ் ஏரியா மாதிரி காட்டிகொண்டால் தான் இப்போ சிங்களவர்களின் அடியில் இருந்து தப்பலாம்.
(உங்களுக்கு தெரியாததா Gtx, இலங்கை முஸ்லிம்கள் தானே “ஆதாயம்” இல்லாமல் ஒன்றும் செய்யமாட்டார்களே)
why the way rishad joint with mahinda so haris 100 time better than rishad
ReplyDeleteIF WE DIDN'T HAVE AN OPTION TO APPOINT A MUSLIM, IT IS ABSOLUTELY OK TO APPOINT A TAMIL BROTHER AS THEY ARE PART OF US, BUT HERE IT IS NOT THE CASE...
ReplyDeleteநியாயமான தெரிவு..
ReplyDeleteThis article is written by not matured person....
ReplyDeleteSo, JaffnaMuslim.com please better avoid this type of KIRUKKU..ssss