குவைட்டில் பணிபுரியும், இலங்கையர்களுக்கான அதிர்ச்சி
குவைட்டில் பணி புரியும் வெளிநாட்டு பணியாளர்களிடம் வரி அறிவிடும் யோசனை ஒன்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பணி புரியும் இலங்கை பணியாளர்களுக்கு பெருமளவில் நெருக்கடிகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதிய சட்டத்தின்படி, 90 தினார் வரை வேதனம் பெறும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்பும் போது அதன் மீது 1 சதவிகிதம் வரி விதிக்கப்படவுள்ளது.
இவ்வாறாக, வேதனத்திற்கு ஏற்ப 5 சதவிகிதம் வரை வரி அறவிடப்படவுள்ளது.
குவைட்டில் செயற்படும் வங்கிகள் மற்றும் பணப்பறிமாற்ற நிறுவனங்கள் பணத்தை அனுப்பும் போது இந்த வரி அறவிடப்படும்.
இந்த வரியை அறவிடத் தவறும் வங்கிகள் மற்றும் பணப்பறிமாற்ற நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமாக பணம் அனுப்பும் பட்சத்தில் சிறை தண்டனை மற்றும் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் மீதான வரைவு குவைட் நாடாளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால், சட்டவிரோதமாக பணம் அனுப்பும் முயற்சிகள் அதிகரித்து, அது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என வங்கிகள் தெரிவித்துள்ளன.
குவைட்டில் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் பணிபுரிந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment