Header Ads



என் வரலாற்றில் காற்றுப்போன, பிரேரணையை இப்போதே பார்க்கிறேன் - ஹக்கீம்

தன்னுடைய நாடாளுமன்ற வரலாற்றில் எத்தனை​யோ நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைப் பார்த்துள்ள நிலையில், ஆரம்பிக்கும் போதே காற்றுப்போன நம்பிக்கையில்லாப் பிரேரணையை இப்போதே பார்ப்பதாக அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையானது, அரசாங்கத்தை இலக்காகக் கொண்டது. மஹிந்த இதில் கையெழுத்திடவில்லை. அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் 3 குழுக்கள் செய்றபடுவது தெரிகின்றது. இதில் ராஜபக்ஷக்கள் நீண்ட பயணத்தை இலக்காக கொண்டு செயற்படுகின்றமையை காணமுடிவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

1 comment:

  1. நீங்க காற்று அடிப்பீங்களே தலைவரே..

    ReplyDelete

Powered by Blogger.