இலங்கையில் பணத்தை கொட்டும், அதிவேக பாதைகள்
அதிவேகப் பாதைகளில் கடந்த 11ஆம் திகதி மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பாரிய வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரையான 24 மணிநேர காலப்பகுதிக்குள் அதிவேகப் பாதைகளில் ஒரு இலட்சத்தி ஐயாயிரம் வாகனங்கள் பயணித்துள்ளன.
இதில் தென்னிலங்கை அதிவேகப் பாதையில் 70 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளன. இதன் காரணமாக சுமார் 23 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
ஏனைய நாட்களில் இப்பாதை வழியாக 47 - 57 ஆயிரம் வரையான வாகனங்கள் மட்டுமே பயணிக்கும் நிலையில் 19 மில்லியன் ரூபா வரையான வருமானம் ஈட்டப்படுவதாக தெரிய வந்துள்ளது.
அதே போன்று ஏனைய நாட்களில் வழமையாக 25 ஆயிரம் வரையான வாகனங்களின் போக்குவரத்து காரணமாக 06 மில்லியன் ரூபா வரை வருமானமீட்டும் கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் 11ஆம் திகதி மட்டும் 35 ஆயிரங்கள் வாகனங்கள் பயணித்துள்ளன.
இதன் காரணமாக 07 மில்லியன் ரூபா வரையான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அதிவேகப் பாதைகளில் பாரிய வருமானம் ஈட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொறுத்தமில்லாத தலைப்பு.
ReplyDeleteகடன்வாங்கி போட்ட அதி வேக பாதைக்கு வட்டியுடன் கடன் கட்டுவது பொது மக்கள் அதே பொது மக்கள் அதே பாதையில் பிரயாணம் செய்வதன்றால் பணம் கட்ட வேண்டும் இதுதான் இந்த நாடு அதே வேலை அரசியல் வாதி அதை பயன்படுத்தினால் அரச சேவை
ReplyDelete