Header Ads



ஜனாதிபதி - பிரதமர் இணக்கப்பாடு இல்லை, புதிய அமைச்சரவை மாற்றம் எப்போது..?

அமைச்சரவை மாற்றம் காலம் தாழ்த்தப்படும் என ஜனாதிபதி செயலக சிரேஸ்ட அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் இதுவரையில் எந்தவித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்ளாத காரணத்தினால் அமைச்சரவை மாற்றம் காலம் தாழ்த்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 10ஆம் திகதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, முழு அளவில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என ஜனாதிபதி நேற்றைய தினம் ஊடகப் பிரதானிகளிடம் தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் அமைச்சுக்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. These Jokers will not do nothing to the Country.............

    ReplyDelete
  2. இந்த மூன்று வருடமாக நாடு படும்பாடு .

    ReplyDelete
  3. இந்த மூன்று வருடமாக நாடு படும்பாடு .சுதந்திரம் கிடைத்ததில் இருந்து இந்த அரசாங்கம் நடத்திய கூட்டமே இந்த மூன்று வருடத்தில் அதிகம்

    ReplyDelete
  4. 225 பேரையும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாக ஆக்கி விடுங்கள் அப்போது பிரச்சினை தீர்ந்து விடும் அதன் பின்னாவது நாட்டப்பற்றியாவது யோசிங்கள்

    ReplyDelete
  5. இந்த பேச்சுக்களில் ஒர் உண்மை தௌிவாகத் தென்படுகின்றது. அதுதான் இவர்களின் நடத்தை இந்த நாட்டுமக்கள், இந்த நாட்டுக்கு என்னவகையிலும் பிரயோசனப்படமாட்டாது. அவர்களின் செயல் தலைவலிக்கு தலையணை மாற்றும் செயற்பாடு மட்டும்தான்.

    ReplyDelete
  6. ரெண்டு வெலே பால்கலும் பேசாமே போங்கடா வீட்டுக்கு !

    ReplyDelete

Powered by Blogger.