Header Ads



சிங்களம் தெரியாத முஸ்லிம், மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாபம் - பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமானம்

பேருந்து நடத்துனர் செய்த தவறான காரியத்தால் அனாதரவான நிலையில் விடப்பட்ட சிறுவனை பொலிஸாரும், கலேவலை பிரதேசவாசிகளும் இணைந்து இணைந்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலன்னறுவை அரபு முஸ்லிம் பாடசாலையில் கல்வி பயிலும் 12 வயதான மொஹமட் ஆசிப் என்ற சிறுவன் ஹொரவபொத்தனையில் உள்ள தனது வீட்டுக்கு செல்ல பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார்.

ஹொரவபொத்தனை செல்லும் பேருந்துக்கு பதிலாக சிறுவன் பொலன்னறுவையில் இருந்து கொழும்பு செல்லும் பேருந்தில் தவறுதலாக ஏறியுள்ளார்.

சிறுவன் பேருந்தில் உறங்கியுள்ளதுடன் பொலன்னறுவையில் இருந்து சுமார் 86 கிலோ மீற்றர் தூரம் சென்ற பின்னர் கலேவலை - பொலிகமுவ பிரதேசத்தில் சிறுவன் விழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிங்கள மொழியை சரளமாக பேச முடியாத இந்த சிறுவன் பேருந்து நடத்துனரிடம் விசாரித்துள்ளார்.

இறுதியில் பேருந்து நடத்துனர், எந்த பிரதேசங்களும் தெரியாத சிறுவனை கலேவலை பொலிகமுவ பிரதேசத்தில் பிரதான வீதியில் இறக்கி விட்டுள்ளதுடன் ஹொரவபொத்தனை செல்லும் பேருந்தில் ஏறிச் செல்லுமாறு கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றதாக சிறுவனிடம் மேற்கொள்ளப்ட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாழ்க்கையில் என்றுமே பார்த்திராத பிரதேசம் ஒன்றில் இந்த சிறுவன் வீதியில் நடந்து செல்வதை கண்ட தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஒருவர் இது குறித்து கலேவலை பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

உடனடியாக அங்கு சென்ற கலேவலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜானக விதானாச்சி, தனியார் நிறுவனத்தின் முகாமையாளருக்கு நன்றி கூறியதுடன் இருவரையும் ஜீப் வண்டியில் ஏற்றிக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

தமிழ் மொழியில் பேசக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் சிறுவனின் பெற்றோர் குறித்து விபரங்களை அறிந்து கொண்ட பொறுப்பதிகாரி, ஹொரவபொத்தனை பொலிஸ் நிலையத்தின் ஊடாக பெற்றோருக்கு தெரியப்படுத்தி, உடடினயாக கலேவலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அறிவித்துள்ளார்.

சிறுவனுக்கு உணவு உட்பட தேவையானவற்றை பெற்றுக்கொடுத்த பொலிஸார் பெற்றோர் வரும் வரையில் பொலிஸ் நிலையத்தில் தங்க வைத்துள்னர்.

இதனையடுத்து கலேவலை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சிறுவனின் தந்தை அடையாளங்களை உறுதிப்படுத்தி, பொலிஸாருக்கும், தனியார் நிறுவனத்தின் முகாமையாளருக்கு நன்றியை தெரிவித்து விட்டு, சிறுவனை அழைத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட கலேவலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதானாச்சி,

“மதம் எதுவாக இருந்தாலும் சிறுவன் இலங்கை சிறுவன் எனவும் அவருக்கு அன்பையும் அரவணைப்பையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொடுப்பது, தமிழ், சிங்களம், முஸ்லிம் எந்த இனமாக இருந்தாலும் அது இலங்கையர்களின் கடமை” எனக் கூறியுள்ளார்.

மேலும் பாடசாலை விடுமுறையில் பிள்ளை அனுப்பி வைக்கும் போது குறிப்பாக சிறு பிள்ளைகள் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளா

2 comments:

  1. 75% சிங்கள மொழி பேசும் நம் நாட்டில் இன்னும் சிங்களம் தெரியாது என்று ஒரு கூட்டம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மாற வேண்டியது இவைகள் தாம். மத்ரஸாக்களிலும் சிங்களம் கட்டாயமாக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டமிட்ட பாடத்திட்டம் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.