"இந்த செல்வங்களை கொண்டு, என்னை சோதித்து விடாதே”
உமர் رضي الله عنه -வின் ஆட்சிக்காலம். ஸஃயீத் இப்னு அபீவக்காஸ் : رضي الله عنه -வின் படைகள் பாரசீகர்களிற்கு எதிராக காதிஸிய்யாவில் பல யுத்தங்களை நிகழ்த்தியிருந்தன. பெருந்தளபதி ருஸ்தும் கொல்லப்பட்டான். ஹோர்மூஸான் கைது செய்யப்பட்டான். செயின்ஸ் ஒஃப் வோர் முடிவிற்கு வந்தது.
பெரும் செல்வம் கனீமத்தாக. அதில் ஐந்தில் ஒரு பங்கு பொக்கிஷங்கள் மதீனாவிற்கு ட்ரான்ஸ்பர் பண்ணப்பட்டன அபீவக்காஸ் : رضي الله عنه -வினால்.
அமீருல் முஃமினீன் உமர் : رضي الله عنه -வின் முன்னாள் அவை கொண்டு வரப்பட்டு குவிக்கப்பட்டன. தனது கைத்தடியால் அவற்றை கிளறிப் பார்த்தார் இஸ்லாமிய அரசின் கலீபா.
தங்கங்கள், வெள்ளிகள், வைடூரியங்கள் என குவிந்து கிடந்தன. பாரசீகப் பேரரசன் குஸ்ருவின் தங்கத்தில் மரகத கற்கள் பதிக்கப்பட்ட ஆடை, வைரங்கள் பொதிக்கப்பட்ட அவனது இடுப்புக் கச்சை, தங்கத்தில் இரத்தினக்கற்கள் பொதிக்கப்பட்ட அவனது கிரீடம், பல வகை கற்களினால் செய்யப்பட்ட அவனது வாளின் உறை என ஏராளம்.
தன் கைகளை மேலுயர்த்தி பிரார்த்தனை செய்தார் உமர் : رضي الله عنه . “யா அல்லாஹ் என் தூதரின் காலத்தில் இதனை நீ நல்கவில்லை. அவரிற்கு அடுத்ததாக மனிதரில் சிறந்தவர் அபூபக்கரிற்கும் இதனை நீ வழக்கவில்லை.
இந்த உமரிற்கு இதனை தந்துள்ளாய். என்னை இந்த செல்வங்களை கொண்டு சோதித்து விடாதே”.
தன் பெட்ச் போட்ட மேலங்கியை தொட்டுப் பார்த்தார். பிடித்துப் பார்த்தார். அதன் தரத்தை உணர்ந்து பார்த்தார். இதற்கும் கேள்வி கணக்கிருக்கிறதே என அவர் உள்ளம் அந்த சிட்டிவேஷனிலும் பயந்தது. யாருக்கு வரும் இந்த பேர்பெக்சன்?.
ஸுராக்கா இப்னு மாலிக் رضي الله عنه -வை அழைத்து குஸ்ருவின் உடைகளை அணியச் சொன்னார். கீரீடத்தை அணியச் சொன்னார். கடகங்களை கைகளில் அணியச் சொன்னார். அவ்வாறே செய்தார் ஸுராக்கா.
நமது நாடோடி பதூ சகோதரர் பாரசீக சக்கரவர்த்தியின் கிரீடத்தை அணிந்துள்ளார் என சந்தோஷம் பொங்க மற்றவர்களைப் பார்த்து கூறினார் உமர் : رضي الله عنه.
அவரை சில கணங்கள் பார்த்தபடி இருந்தார் அமீருல் முஃமினீன். பின் அவரைச் சுற்றி ஒரு ரவுண்ட் வந்தார். உடனடியாக அணிந்தவற்றை கழட்டி அந்த குவியலில் வீசும்படி சொன்னார். பின் கேட்டார் “இப்போது எப்படி உணர்கிறீர்கள் ஸுரக்கா? என்று.
ஸுராக்கா இப்னு மாலிக் رضي الله عنه அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா!. “பிஃலிங் மச் பெட்டர் யா அமீருல் முஃமினீன்”. “இவையில்லாத இந்த சாதாரண உடையில் நான் நிம்மதியும் சந்தோஷமும் கொள்கிறேன். கலீஃபாவின் கட்டளை என்றதனால் தான் நான் இதை சில கணம் அணிந்தேன். அல்லாவிடின் இவை பாலைவன மண்ணின் தூசியை விட பெறுமதியற்றவை எனக்கு”.
இஸ்லாம் உலகம் பற்றி அந்த இரண்டு உள்ளங்களிற்கு வழங்கிய தர்ப்பியத் அது.
அந்த பக்குவ நிலையல்ல விடயம், எத்தகைய ஒரு சூழ்நிலையில் அவர்கள் அதனை வெளிப்படுத்தினர் என்பதே. வஹ்ன் இவர்கள் சுவாசத்தின் வெப்பத்திலேயே பஸ்பமாகிவிடும். அத்தகைய மனிதர்கள் அவர்கள்.
-Rumi Abdul Azeez-
"Feeling much better ya ameerulmumineen"
ReplyDeleteThank you.
if you send something like this of from al quraan allso
"we feel like European"
நல்ல ஆக்கம்!
ReplyDeletedid he said in english?.dont translete hadees as you want.are u muslim
ReplyDelete