Header Ads



ரணிலின் உருக்கமான பேக்புக் பதிவு

இலங்கை அரசியலில் அதிகம் பேசப்பட்ட விடயமாக சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாறியிருந்தார்.

கடந்த சில வாரங்களாக அனைத்து ஊடகங்களில் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான செய்திகளே முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விசேட வாக்கெடுப்பின் பின்னரே இவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

எப்படியிருப்பினும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தவர்கள், வாக்களிப்பதனை புறக்கணித்தவர்கள் என அனைவருக்கும் தனது பேஸ்புக் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது பேஸ்புக் பதிவில், “கஷ்டமாக காலங்களில் எனக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி..

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்கள் மற்றும் வாக்களிப்பதனை புறக்கணித்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

2015ஆம் ஆண்டு நாம் பெற்றுக் கொண்ட வெற்றியை தொடர்ந்து நடத்தி செல்வதற்காக நமது நாட்டின் மத மற்றும் இன சமூகங்களுடன் இணைவது மகிழ்ச்சியான விடயமாகும்.

அவதூறு, தவறான பிரச்சாரம் மற்றும் மூட நம்பிக்கைகளை பரப்பி கொண்டிருந்த தரப்பினரை தோல்வியடைய செய்வதற்கு, பல்வேறு மத சடங்குகள் செய்த அனைவருக்கு மற்றும் கடந்த காலங்களில் ஆதரவு வழங்கி ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

எங்கள் வெற்றியை சமாதானம், ஒற்றுமை, அபிவிருத்தி மற்றும் நீதியை உறுதி செய்யும் வேலைத்திட்டததை மேலும் வலுவாக முன்நோக்கி கொண்டு செல்வதற்காக பயன்படுத்த வேண்டும்” என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பதவியில் இருந்து விலகிச் செல்ல வேண்டும் கோரியிருந்தனர்.

நேற்றைய வாக்கெடுப்பில் ரணில் தோல்வி கண்டிருந்தால், அவரின் அரசியல் வாழ்வுக்கான கடைசி தருணமாக இருந்திருக்கும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.