Header Ads



பிரதமருக்கு எதிராக வாக்களிப்பவர்கள், மீண்டும் அமைச்சரவைக்குள் வரமுடியாது - ராஜித திட்டவட்டம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனைக்கு வாக்களிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சரவைக்குள் வர முடியாது என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரதமருக்கு எதிராக வாக்களித்து விட்டு அமைச்சரவைக்கு வருவதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று -04- நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்க உதவுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை எனவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் இந்த வருடம் திருடர்களின் இறுதி வருடம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Keep Saying.. But never acted to arrest the thieves and killers even after evidence are on the table.

    Politicians always talk but they change next day... That is why they are called Poli.

    ReplyDelete

Powered by Blogger.