இம்முறை அமைச்சர்களை நியமிக்கும்போது, அவர் தகுதியானவரா என தேடிப்பாரப்பேன்
நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய வகையிலான புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். புதிய அமைச்சரவையை நியமிக்கும்போது அமைச்சுப் பதவி வழங்கப்படுகின்றவர்களின் சர்வதேச பிரதிபலிப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனுக்கு சென்றிருந்தபோது அங்கு பி.பி. சி. சிங்கள செய்தி சேவைக்கு நேற்று முன்தினம் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புதிய அமைச்சரவைக்கு அமைச்சர்களை நியமிக்கும்போது அவர்களின் உள்நாட்டு நிலைமை மட்டுமன்றி சர்வதேச பிரதிபலிப்பு குறித்தும் ஆராயப்படும்.
அண்மையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவிக்கான நியமனத்தின்போது சர்வதேச நிலைமைகளையும் பார்க்கவேண்டிய தேவை எனக்கு இருந்தது.
எந்தவொரு விடயமானாலும் ஒரு அமைச்சரை நியமிக்கும்போது அவர் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்படுபவராக இருக்கவேண்டும்.
தற்போது அமைச்சரவை மாற்றம் இடம்பெறப்போவதில்லை. மாறாக புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய வகையிலான புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன் என்றார்.
இதன்போது புதிய அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்து பி.பி. சி. செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு இன்னும் ஒருவார காலம் உள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி பதவி விலக்கப்பட்ட அமைச்சர்களை மீண்டும் நியமிப்பதா இல்லையா என்பது குறித்து அரசியல் கட்சிகளே தீர்மானம் எடுக்கவேண்டும்.
நான் இம்முறை அமைச்சர்களை நியமிக்கும்போது அவர் அந்த பதவிக்கு தகுதியானவரா என்பது குறித்து தேடிப்பாரப்பேன். அதன்படி மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையிலான அமைச்சரவையை நியமிப்பேன் என்றார்.
first of all you are not suitable for president post.
ReplyDelete