Header Ads



தற்போதைய நிலை, உக்கிரமடைய இதுதான் காரணம் - மஹிந்த

நாட்டை நிர்வகிக்கும் தலைவர்கள் அதிகரித்தால் தீர்மானங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் நாட்டின் தற்போதைய நிலை உக்கிரமடைவதற்கும் அதுவே காணரம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். 

கட்டான பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்படுகின்ற சில சம்பவங்களால் நல்லிணக்கம் நம்மிடம் இருந்து தூரமாகின்றதாகவும், ஒருவகையில் இவற்றுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் கூறினார். 

இவ்வாறான நிலமைகள் ஏற்படுவதற்கு காரணம் தீர்மானம் எடுக்க முடியாத நிலையே அல்லது தீர்மானம் எடுப்பதற்கு அளவுக்கு அதிகமானவர்கள் இருப்பதே என்று அவர் கூறியுள்ளார். 

அதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பில் அனைவரும் தௌிவாக உள்ளதாகவும், 04ம் திகதி இரவு 09.30 மணிக்கு அதன் பெறுபேறு வௌியாகும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

2 comments:

  1. விஹாரைகளிலும் பன்சலை களிலும் முஸ்லிம்கள் செல்ல முடியாத இடங்களில் கூட்டங்கள் நடத்தி முஸ்லிம்களை பற்றியும் தமிழர்களைப்பற்றியும் சிங்கள மற்றும் பவுத்த மக்களிடையே மிக மோசமான, வெறுப்பூட்டக்கூடிய விதத்தில் பேசி இன மத துவேசத்தை விதைத்து அதனை தேர்தலில் அறுவடையாக்கும் மிக மோசமான கொள்கையுடைய இவருக்கு முஸ்லீம் மீடியாக்கள் என்று தொழில் செய்யும் மீடியாக்கள் சொம்படிப்பது கவலைக்குரிய விடயமே. முஸ்லிம்களே உங்களுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல நல்ல சமூக அக்கறையுள்ள மீடியாக்களும் தேவை.

    ReplyDelete
  2. Keep Trying... Never giving up....

    ReplyDelete

Powered by Blogger.