இறுதி சமரச முயற்சி இன்று, அமைதியாக இருந்த ரணில்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நாளை நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பாக சமரசத்தை ஏற்படுத்தி ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான இறுதிச் சந்திப்பொன்றை இன்று -03- காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தவிருக்கிறார்.
அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று காலை ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் இரண்டு தரப்பினரும் எவ்வாறு சமரசமான முறையில் இணக்கப்பாட்டிற்கு வர முடியும் என்பது குறித்து ஆராயப்படவிருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்குமிடையில் நேற்றுமாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். முதலில் இந்த கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான நிலைப்பாடுகளில் இருப்பதாகவும் தற்போது பிரேரணையின் வெற்றி தோல்வி நிலைமையானது 50 க்கு 50 என்ற நிலைமையில் காணப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா பிரேரணயில் வெற்றிபெறுமானால் அது தென்னிலங்கையில் இனவாதிகளுக்கு தீணி போடுவதாக அமையும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெ ளியிட்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குளை பெற்று நீங்கள் வெற்றி பெற்றீர்கள். அப்படி உங்களால் வெற்றி பெற முடியுமாயின் ஏன் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏன் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க முடியாது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இல்லை. இல்லை. நான் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குளை பெற்று வெற்றியீட்டியதை நினைத்து பெருமையடைகிறேன். இதனை நான் உலகம் முழுவதும் கூறி வருகிறேன். ஆனால் தென்னிலங்கையில் தற்போது இருக்கும் நிலைமை குறித்தே நான் இந்த இடத்தில் தெ ளிவுபடுத்தினேன் என்று குறிப்பிட்டார். இதனையடுத்து கேள்வி எழுப்பிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன், நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் அக் கட்சி பிரதமருக்கு ஆதரவளித்தால் ஒரு நெருக்கடியும் இல்லைதானே என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது குறித்து நான் தற்போது சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். (நேற்றிரவு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது) சுதந்திரக் கட்சியானது டிசம்பர் 31 ஆம் திகதியே தேசிய அரசாங்கத்தை விட்டு வில தீர்மானித்தது. ஆனால் நான்தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடையும் வரை அரசாங்கத்தில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டேன் என்றார்.
இதன்போது இந்த விடயம் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு என்ன செய்யலாம் என்று கலந்துரையாடலில் கலந்து கொண்ட எம்.பி.க்கள் கேட்டிருக்கின்றனர். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை காலை (இன்று காலை) சுதந்திரக் கட்சியினரையும் ஐக்கிய தேசிய முன்னணியினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக குறிப்பிட்டிருக்கிறார். அதாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இறுதி சமரச முயற்சியாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான இந்த சந்திப்பை நடத்துவோம் என ஜனாதிபதி இதன்போது ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களிடம் இணக்கம் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல் முடியும் வரை எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்திருக்கிறார். தொடர்ந்து இன்று காலை சந்தித்து இறுதியாக ஆராய்வது என்ற தீர்மானத்துடன் கூட்டம் நிறைவடைந்திருக்கிறது.
தென்னிலங்கை மக்களை காட்டிக்காட்டியே இந்த தலைவர்கள் ஆட்சியை கொண்டு போகின்றார்கள் இதன் அர்த்தம் இன்னும் சிறுபான்மையை மனப்பூர்வமாக இவர்கள் இலங்கை மக்கள்தான் என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாக புரிகின்றது.
ReplyDeleteDoes this mean ! Compromising the rights of North Tamils voting, for the sake of southern racist ?
ReplyDeleteIt seems this impeachment is first to be brought against to President for being in this situation. By fearing the racist he wanted to harm others.
We Need Strong Leader.