ஐக்கிய தேசியக் கட்சி, தனித்து ஆட்சியமைக்க வேண்டும் - அமில தேரர்
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சியை அமைக்காது, ஐக்கிய தேசியக்கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என பிரஜைகள் அமைப்புகள் ஒன்றியத்தின் உறுப்பினர் பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பிய எவரையும் பிரதமராக நியமித்து அரசாங்கம் ஒன்றை அமைக்க இடமளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார். தம்பர அமில தேரர் ஐக்கிய தேசியக்கட்சிபதவி ஆசைகளை கைவி்ட்டு, தமது கட்சியையும் தலைவரையும் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்
எவ்வாறாயினும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் கட்டாயம் வெற்றி பெறுவார். இதனையடுத்து மறுநாள் அரசாங்கத்தை விட்டு விலகி ஜனவரி புரட்சியை மீண்டும் ஆரம்பிக்க ஐக்கிய தேசியக்கட்சி தனி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். இதற்கு பிரஜைகள் அமைப்புகளின் ஒன்றியம் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்து, பிரதமர் வெற்றி பெற்றால், இன்றிரவு ஐக்கிய தேசியக்கட்சியின் மகிழ்ச்சியில் கோஷம்மிட்டு கொண்டாட வேண்டும்.
மேலும் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 இருக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டு சகல திருடர்களையும் பிடித்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment