Header Ads



என் மீது நம்பிக்கை வைத்து, செயலாளராக என்னை பிரதமர் அறிவித்திருந்தார் - கபீர்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை நான் இராஜினாமா செய்துவிட்டேன். கட்சியின் மாற்றத்துக்கு வழிவிட்டே பதவியை இராஜினாமா செய்தேன் என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இராஜினாமா கடிதம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும், கட்சி மறுசீரமைப்புக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் வகையிலேயே இந்த முடிவை தான் எடுத்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐ.தே.கவின் பொதுச் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க விலகிய ஒரு மணித்தியாலத்தில் என் மீது நம்பிக்கைவைத்து பொதுச் செயலாளராக என்னை பிரதமர் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்றுவரை எனது பணிகளைச் செய்துள்ளேன். ஐ.தே.கவில் மேற்கொள்ளப்படவுள்ள முற்றுமுழுதான மறுசீரமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே நான் பதவியை இராஜினாமா செய்கின்றேன்.

அதற்கான கடிதம் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நான் பதவிகளுக்காக ஒருபோதும் செயற்பட்டதில்லை. கட்சிக்காகவே செயற்படுகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நீங்களாகவே இராஜனாமா செய்ய வில்லை என்றால் வாளுக்காரமாக விலக்கப்படுவீர்கள்.

    ReplyDelete
  2. Changin Pillows will not solve the problem......

    ReplyDelete

Powered by Blogger.