சிங்கள – முஸ்லிம் சகோதரத்துவ மாநாடு
இலங்கை கலாச்சாரத்துக்கு ஒத்துப்போகும் சிங்கள, முஸ்லிம் சமூகமொன்றை யட்டிநுவரையிலிருந்து கட்டியெழுப்பும் நோக்கில் சிங்கள – முஸ்லிம் சகோதரத்துவ மாநாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
தேசிய இளம் பிக்குகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு எதிர்வரும் 07ம் திகதி பிற்பகல் 02 மணிக்கு கண்டி, நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தின் விகாராதிபதி வத்துறகும்புறே தம்மாரத்தன தேரரின் நன்முயற்சியால் நல்லிணக்கத்தை நோக்காக கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.
ReplyDelete(அல்குர்ஆன் : 4:114)