சையத் குலாப் என்ற, இஸ்லாமிய இளைஞரின் தியாகம்
சையத் குலாப் என்ற இஸ்லாமிய இளைஞர் துபாயில் மூன்று ஆண்டுகள் வேலை செய்து வந்தார். வேலை செய்து கொண்டிருக்கும் போதே நமது தாய் நாட்டுக்கு நம்மால் ஆன உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதுக்குள் எண்ணினார். துபாய் வேலையை ராஜினாமா செய்து விட்டு தாயகம் திரும்பி தொழில் தொடங்கினார். கடுமையாக உழைத்ததால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. தொழிலில் கிடைத்த மேலதிக லாபத்தை தனது தேவைக்கு போக மீதமுள்ளதை ஏழைகளுக்கு உணவளிப்பதில் செலவழித்தார். இவர் இலவசமாக உணவு வழங்குவதை அறிந்த பலர் தொடர்ந்து தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்.
பெங்களூருவில் பிரதானமான இடத்தில் அமைந்திருக்கும் நிம்ஹல் மருத்துவமனையில் தினமும் ஏழைகள், வழி போக்கர்கள், நோயாளிகளின் உறவினர்கள் என்று இவரது சேவை நீண்டு கொண்டே செல்கிறது. ஒரு நாளைக்கு மதிய உணவு 300 பேருக்கு இவரது நண்பர்களோடு சேர்ந்து சமைத்துக் கொடுக்கிறார்.
இந்த மருத்துவமனைக்கு அருகிலேயே ராஜீவ் காந்தி மருத்துவமனை, சஞ்சய் காந்தி மருத்துவ மனைகளும் அமைந்துள்ளது. பெங்களூரு போன்ற ஸ்மார்ட் சிட்டியில் மதிய உணவு என்ன விலை விற்கப்படும் என்பது நமக்கும் தெரியும். சாதி மத பேதம் பாராது சையத் குலாப் என்ற இந்த இளைஞன் தரும் ஒரு வேளை உணவை வாங்க நீண்ட வரிசை தினமும் காத்திருக்கிறது.
நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற மேல் தட்டு மக்கள் மக்கள் வங்கியில் சேமித்த பணத்தை திருடி மேல் நாடுகளில் உல்லாசமாக சுற்றுகின்றனர். பெரும் செல்வந்தரல்லாத சையத் குலாப் போன்ற இளைஞர்கள் தமது சேமிப்பை ஏழைகளுக்கு வழங்குகிறார்கள். நாட்டுப் பற்று என்பது எவரிடத்தில் அதிகமிருக்கிறது என்பதை இந்நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்
குர்ஆன் (2:261)
அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் தர்மம் செய்வதால் இரண்டு நன்மைகள் கிடைக்கிறது,
1. தர்மம் செய்பவரின் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேற்காணும் விதம் அபிவிருத்தி ஏற்படுகின்றது.
2. தர்மம் செய்ததற்கான நன்மைகள் எழுதப்படுகின்றன.
Post a Comment