Header Ads



சு.க. அமைச்சர்களுக்கு, மஹிந்த பகிரங்க அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பகிரங்க அழைப்பு விடுக்க உள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நமப்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

தம்முடன் இணைந்து கொண்டு அரசியல் பயணத்தை தொடருமாறு அவர் கோரவுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் இந்த சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி பகிரங்கமாக அழைப்பு விடுக்க உள்ளார்.

பிரதமருக்கு எதிராக வாக்களித்த 16 அமைச்சர்களுக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

இந்த 16 அமைச்சர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இனத்தோடு சேரும் இனம் காணப்பட்ட இனவாதிகள்!

    ReplyDelete

Powered by Blogger.