மனம் உடைந்துபோன, நிமால் சிறிபால சில்வா,
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றிருந்தால், போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிற்கு பிரரதமர் பதவி வழங்கப்படும் பரவலாக பேசப்பட்டது.
எவ்வாறெனினும், பிரதமர் பதவி கிடைக்காது என உறுதியானதன் பின்னர் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட தினத்திலேயே நிமால் சிறிபால டி சில்வா வெளிநாடு சென்றுள்ளார்.
பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு சுதந்திரக் கட்சியின் சார்பில் அதிகாரபூர்மாக கோரியதும் நிமால் சிறிபால டி சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இறுதி நேரத்தில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எடுத்த தீர்மானம் காரணமாக மனம் உடைந்து போன நிமால் சிறிபால டி சில்வா, லண்டன் புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரே பாடசாலை எனக் கூறிக் கொள்ளும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தம்மை கஸ்டத்தில் போட்டுவிட்டதாக நிமால் சிறிபால டி சில்வா தமக்கு நெருக்கமானவர்களிடம் நொந்து கொள்வதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது பாடசாலையைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவரும் உதவுவதாக திலங்க சுமதிபால கூறிய போதிலும், இந்த விடயமே குறித்த உறுப்பினருக்கு தெரியாது என்பது பின்னர் தெரியவந்துள்ளதாக இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment