மதிய உணவை அருந்திவிட்டு வீடு செல்வோம், நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெறுங்கள்
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியுடன் 122 வாக்குகள் காணப்படுவதாகவும், பிரேரணைக்கு ஆதரவாக 80 வாக்குகள் மாத்திரமே காணப்படுவதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
விமல் வீரவன்ச தோல்வியை ஏற்றுக் கொண்டார். இதனால் நல்லாட்சி சுத்தமாக்கப்பட்டது என தெரிவித்த அமைச்சர் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு பாராளுமன்ற தினேஷ் குணவர்தனவுக்கு அழைப்பு விடுத்தார்.
எமக்கு 122 வாக்குகள் உள்ளது, பிரேரணைக்கு ஆதரவாக 80 வாக்குகள் மாத்திரமே உள்ளது, எனவே நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற்றுக்கொள்ளுங்கள். மதிய உணவை அருந்திவிட்டு வீட்டுக்குச் செல்வோம் என அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்தார்
Post a Comment