ஐ.தே.க. செயலாளராக இம்தியாஸ்..?
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக இம்தியாஸ் நியமிக்கப்பட வேண்டுமென மூத்த அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
அவரின் கோரிக்கைக்கு கட்சி மட்டத்திலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ஆராயப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
நாடளாவிய ரீதியிலும், ஐ.தே.க. மட்டத்திரும் இம்தியாஸுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
காலத்துக்கும் நேரத்துக்கும் மிகவும் பொறுத்தமான ஒருவர். ஆனால் மற்றவர்கள் போலன்றி ஒரு கொள்கையும் நல்லெண்ணத்துடன் வாழும் இந்த உயரிய மனிதர் தனியான ஆளுமையும் கொண்டவர். பதவியை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பது தான் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு நல்ல எதிர்பார்ப்பு.
ReplyDelete