பிரேரணைக்கு ஆதரவளிக்கும், நபர்களின் பிறப்பு பற்றி தேடியறிய வேண்டும் - மேர்வின்
ஐக்கிய தேசிய கட்சி காரணமாகவே தற்போது பலர் உயிர் தப்பியிருப்பதாகவும், இதனால், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நபர்களின் பிறப்பு பற்றி தேடியறிய வேண்டும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்கான பின்னணியில் இருக்கும் மிகப் பெரிய சக்தியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இருந்து வருகிறார். பிரதமரை பதவியில் இருந்து நீக்குவது என்பது நல்லாட்சியினை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாகும்.
பிரதமரை நீக்கும் அதிகாரம் ஐக்கிய தேசியக்கட்சிக்கே இருக்கின்றது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு பிரதமர் தொடர்பில் பிரச்சினையில்லை என்றால், கூட்டு எதிர்க்கட்சிக்கு பிரச்சினையாக வாய்ப்பில்லை.
ஒரு காலத்தில் நான் ஐக்கிய தேசியக்கட்சியையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் விமர்சித்தேன். ஆனால், தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க நிபந்தனையின்றி குரல் கொடுப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார
Post a Comment