முச்சக்கர வண்டிக்கு பதிலாக, இலங்கையில் அறிமுகமாகும் புதியவகை வாகனம்
இலங்கையில் முச்சக்கர வண்டிக்கு பதிலாக நான்கு சக்கர வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது.
மோட்டார் வாகன சட்டமூலத்திற்கான 3 உத்தரவுகளுக்கு நேற்று -06 நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது.
2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக நான்கு வாகனம் ஒன்றை இலங்கை சட்டத்திற்குள் உள்ளடக்குவது, அந்த வாகனங்களை அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதிக்காமை, மோட்டார் வீடு என்ற பெயரில் புதிய வாகன கட்டமைப்பு அறிமுகப்படுத்தி வைத்தல் ஆகியவை இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்கவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment