"உலகிலேயே மிக மோசமான, மாநகர சபை கல்முனை மாநகர கட்டிடமே"
கல்முனை மேயராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரகீப் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். கல்முனையின் மேயராக மருதமுனையை சேர்ந்த ஒருவர் இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டமை மருதமுனை மண்ணுக்கு கிடைத்த பெருமையாகும்.
எம்மை பொறுத்த வரை கல்முனையின் மேயர் என்பவர் முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவராக அல்லாமல் வேறு முஸ்லிம் கட்சியை சேர்ந்தவராக இருந்தால் அவரால் நிச்சயம் கல்முனையை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதில் உறுதியான கருத்து கொண்டவர்கள். 1994ம் ஆண்டு முதல் கல்முனை உள்ளூராட்சி சபையை ஆளும் முஸ்லிம் காங்கிரசினால் குறைந்தது மாநகர சபை கட்டிடத்தைக்கூட கட்ட முடியவில்லை என்பதன் மூலம் மு. காவின் மோசமான ஆட்சியை கண்டு கொள்ளலாம். இதே சட்டத்தரணி ரகீப் அவர்கள் நீண்ட காலமாக உறுப்பினராக இதே மாநகர குடிசைக்குள் இருந்தும் அவராலும் தமது தலைமை ஊடாக அக்குடிசையை கட்டிடமாக்க முடியவில்லை. உலகிலேயே மிக மோசமான மாநகர சபை கட்டிடத்தை கொண்டதாக கல்முனை மாநகர கட்டிடமே உள்ளது.
ஆகவே புதிய மேயர் மேற்படி கட்டிடத்தை நூதணசாலையாக பிரகடனப்படுத்தி விட்டு புதியதொரு இடத்தில் மாநகர கட்டிடத்தை கட்டுவார் என கோரிக்கை விடுக்கிறோம். அதே போல் சாய்ந்தமருது மக்கள் தமக்கான பிரதேச சபையை வேண்டி நின்றாலும் அது கிடைக்கும் வரை அம்மக்கள் கல்முனை மாநகர மக்களாகவே கருதப்படுவர். அது வரை சாய்ந்தமருது மக்களுக்கான கடமைகளை செய்வது கல்முனை மாநகர சபையின் கடமையாகும். இதற்குரிய முன்னெடுப்பை புதிய மேயர் மேற்கொள்ள வேண்டும்.
அதே போல் கடந்த காலத்தில் மேயராக இருந்த மர்ஹூம் மசூர் மௌலனா அவர்கள் தன்னால் மக்களுக்கு சேவை செய்வதற்கான சுதந்திரம் தரப்படவில்லை என அடிக்கடி கூறுவார். அதே போன்று புதிய மேயரும் கூறாமல் சேவையாற்ற வேண்டும். ஒரு வருடத்துள் குறிப்பிடத்தக்க சேவைகளை செய்ய முடியாத போது தனது பதவியை ராஜினாமா செய்வது அழகானதாகும்.
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
??????????????????????????
ReplyDeleteபிரதேசவாதம்.... பாழாப்போன சமூகம்....கிடைத்தாலும் பிரதேசவாதம்...கிடைக்காவிட்டாலும் பிரதேசவாதம்....இந்த முபாரக் என்பவர் எதுக்கோ முந்திய கொசு மாதிரி அறிக்கை ஒன்றை விடுவார் அந்த அறிக்கையினால் தான் காரியங்கள் நடக்கின்றன என்பார். தயவு செய்து முஸ்லிம்களிடம் நாம் கேட்பது பிரதேச வாதம் பேசி முஸ்லிம்களின் ஒற்றுமையை சீரழித்து விடாதீர்கள். முஸ்லிம்கள் இனவாதம் பேசாமல் முதலில் தங்களை பாதுகாத்து கொள்வார்களாக.
ReplyDelete