ஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்
சிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுமி ஆஷிபா எட்டு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்மந்தமாக கேரளாவின் பலரிவடோமை சேர்ந்த கோடாக் மகேந்திரா தனியார் வங்கி துணை மேலாளரான விஷ்ணு நந்தகுமார் பேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதியிருந்தார்.
அதில், இந்த வயதிலேயே ஆஷிபா கொல்லப்பட்டது நல்லது தான், இல்லையென்றால் அவள் வளர்ந்து இந்தியாவுக்கு எதிராக மனித வெடிகுண்டாக வருங்காலத்தில் வந்திருப்பார் என பதிவிட்டிருந்தார்.
விஷ்ணுவின் இந்த பதிவு வைரலான நிலையில் அவருக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து விஷ்ணு பணிபுரியும் கோடாக் மகேந்திரா வங்கியின் பேஸ்புக் பக்கத்தை, பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் வெளுத்து வாங்க ஆரம்பித்தனர்.
முக்கியமாக, விஷ்ணுவை உடனடியாக பணிநீக்கம் செய்யாவிட்டால் கோட்டக் மகேந்திராவில் வைத்துள்ள தங்களது வங்கி கணக்கை மூடி விடுவோம் என பலர் பதிவு செய்தார்கள்.
இதோடு வங்கியின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் அதிருப்தி அளிப்பதாக கூறி பலரும் மதிப்பீடுகளை குறைத்து வழங்கினார்கள்.
இது இரு தினங்களுக்கு முன்னர் நடந்த நிலையில், நேற்று கோட்டாக் மகேந்திரா தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டது.
அதில், நன்கு வேலை செய்யாத காரணத்தால் விஷ்ணு நந்தகுமாரை கடந்த 11-ஆம் திகதி பணி நீக்கம் செய்தோம் என கூறப்பட்டிருந்தது.
இது போன்ற இதயமில்லாத பதிவை எங்கள் முன்னாள் ஊழியர்கள் உட்பட யார் பதிவிட்டாலும் அது கண்டனத்துக்குரியது எனவும் கூறப்பட்டிருந்தது.
விஷ்ணு, ஆஷிபா குறித்து சர்ச்சை பதிவை வெளியிட்ட நாளுக்கு முந்தைய நாளே அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கோட்டக் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது முக்கிய விடயமாகும்.
வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பேஸ்புக்கில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Waster then animals..
ReplyDeleteதப்பாகப் பிறந்த மனித நாய்
ReplyDeleteமனித வெடிகுண்டாக முஸ்லீம்கள் ஆக்கப்பட்டார்கள். அநீதிஇழைக்கப்பட்டவரின் குரல் ஒருநாள் ஓங்கி ஒலித்தேதீரும்.
ReplyDelete