Header Ads



வித்தியாவின் சகோதரிக்கு அரச பணி, ஜனாதிபதி வழங்கினார்


படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம்  - புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான, யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது நியமனத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

கடந்த வருடம் ஜனாதிபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளையில் மாணவி வித்தியாவின் வீட்டுக்கும் சென்று அக்குடும்பத்தினரின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப இந்த நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவி வித்தியாவின் தாயாரான சரஸ்வதி சிவலோகநாதன் மற்றும் வித்தியா சிவலோகநாதன் மன்றத்தின் தலைவி பிரபல திரைப்பட கலைஞர் சுவினீதா வீரசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. Shame...President could not take criminals to justice..... Giving Job to already University qualified sister. Shame...

    ReplyDelete

Powered by Blogger.