Header Ads



வீரமும், துணிச்சலும் முஸ்லிம்களின் அணிகலங்களாகட்டும்..!!

-இர்பான் ஏ. ஹமீட்-

“பசி­கொண்ட மிரு­கங்கள் உணவுத் தட்டை நோக்கி எப்­படி ஏனைய மிரு­கங்­களை அழைக்­குமோ அது­போல முஸ்­லிம்­களை அழிக்க எதி­ரிகள் தங்­க­ளுக்குள் ஒரு சாரார் மற்­று­மொரு சாராரை அழைத்து அறை கூவல் விடுப்பர்…”

இன்று உல­கெங்­கிலும் வாழும் முஸ்­லிம்கள் அவ­லத்தின் உச்­சத்தில் இருக்­கி­றார்கள்.

ஒவ்­வொரு பொழுதும் முஸ்லிம் தேசத்தின் அவலக் குரல் கேட்­டுத்தான் விடி­கி­றதோ என்று எண்­ணு­ம­ளவு எங்­கிலும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான அத்­து­மீ­றல்கள் நீக்­க­மற நிறைந்­தி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.

“…(முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் கட்­டுக்­க­டங்­காமல் கட்­ட­விழ்த்து விடப்­படும் (அந்­நே­ரத்தில்  முஸ்­லிம்­க­ளா­கிய நாம் சொற்­ப­மா­ன­வர்­க­ளா­கவா இருப்போம்? என நபித் தோழர்கள் வின­வு­கி­றார்கள். இல்லை நீங்கள் அதி­க­மா­கத்தான் இருப்­பீர்கள். இருப்­பினும் வெள்­ளத்தில் அடி­பட்டுச் செல்லும் சரு­கு­களைப் போல சக்­தி­யற்று இருப்­பீர்கள். உங்கள் எதி­ரி­களின் உள்­ளத்தில் உங்­களைப் பற்றி இருந்த அச்­சத்தை அல்லாஹ் கழற்றி விடுவான். மேலும் உங்கள் உள்­ளங்­க­ளில்‘வஹ்ன்’ எனும் உள நோய் இருக்கும். நபித் தோழர் ஒருவர் கேட்டார்: ‘வஹ்ன்’ என்றால் என்ன? “உலக மோகம், மரணம் பற்­றிய அச்சம்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதி­ல­ளிக்­கி­றார்கள். (அஹ்மத்)

இரண்டு பில்­லியன் எண்­ணிக்­கை­யினை முஸ்­லிம்கள் எட்டிப் பிடிக்கப் போகி­றார்கள். உலகில் அதி வேக­மாக வளரும் மார்க்­க­மாக இஸ்லாம் இருக்­கி­றது. மேற்­கு­லகில் இஸ்­லாத்தை தழு­வுவோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. இது போன்ற இனிப்­பான செய்­திகள் எம் செவிப்­ப­றை­களைத் தட்டிக் கொண்­டி­ருக்கும் இன்­றைய நாட்­க­ளில்தான் முஸ்­லிம்கள் வகை தொகை­யில்­லாமல் கொத்துக் கொத்­தாக கொன்­றொ­ழிக்­கப்­படும் செய்­தி­களும் அவர்கள் கை கட்டி வாய் பொத்தி பார்த்துக் கொண்­டி­ருக்க அவர்­களின் சொத்­துக்கள் சூரை­யா­டப்­பட்டு எஞ்­சி­யவை தீக்­கி­ரை­யாக்­கப்­ப­டு­கின்ற செய்தி(தீ)களும் எம் இத­யங்­களை பொசுக்கிக் கொண்­டி­ருக்­கின்­றன.

 “எதி­ரியை அடித்து வீழ்த்­து­பவன் வீர­னல்லன். உண்­மை­யான வீரன் கோபத்தின் போது தன்னை அடக்கிக் கொள்­ப­வன்தான்”. (புகாரி, முஸ்லிம்)

“பல­முள்ள முஃமின் பல­வீன­மான முஃமினை விட மிகச் சிறந்­த­வனும் அல்லாஹ்­வுக்கு மிக விருப்­ப­மா­ன­வனும் ஆவான்.” (முஸ்லிம்) என்ற இரு நபி மொழி­க­ளி­னூ­டா­கவும் ஒரு இறை விசு­வா­சி­யிடம் இருக்க வேண்­டிய சிறப்புப் பண்­பு­களை புரிந்து கொள்ள முடி­கி­றது.

துணிச்­ச­லுக்கு முன்­னு­தா­ரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்:

நபி (ஸல்) அவர்கள் வீரத்தின் விளை நில­மாக இருந்­தி­ருக்­கி­றார்கள். பத்ர் யுத்தக் களம். முஸ்­லிம்கள் தரப்பு பிர­பஞ்சக் கார­ணி­களின் அடிப்­ப­டையில் பல­வீ­ன­மான அணி­யாக விளங்­கு­கி­றது. போரிட்­டே­யாக வேண்டும் என்ற நிர்ப்­பந்தம் இருந்­ததைப் போன்று வெற்­றி­யீட்­டியே ஆக வேண்­டு­மென்ற அவ­சி­யமும் இருந்­தது. அனல் பறக்கும் சமரில் நபிகள் நாயகம் முன்­ன­ணியில் நின்று போரா­டு­கி­றார்கள். “எங்­களை விட எதி­ரி­க­ளுடன் மிக நெருக்­க­மாக நபிகள் (ஸல்) அவர்கள் நின்று போரா­டி­னார்கள். நாங்கள் நபிக்கு பின்னால் நின்று கொண்­டுதான் யுத்தம் செய்தோம்.” என ஸஹா­பாக்கள் நபி (ஸல்) அவர்­க­ளது துணிச்­ச­லுக்கு சாட்­சியம் சொல்­கி­றார்கள்.

ஒரு நாள் இரவு நேரம். எங்கும் கும்­மி­ருட்டு. மதீ­னாவின் ஒரு கோடியில் ஏதோ­வொரு அசம்­பா­வி­தத்­திற்­கான சப்தம் கேட்­டது. நாங்கள் ஒரு­வ­ரை­யொ­ருவர் துணை­யாக அழைத்துக் கொண்டு வெளியே வரு­கிறோம். சப்தம் வந்த திக்­கி­லி­ருந்து நபி­ய­வர்கள் வரு­கி­றார்கள். “அஞ்­சும்­படி எதுவும் கிடை­யாது. எல்­லோரும் அவ­ரவர் வீடு­க­ளுக்கு சென்று விடுங்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறு­கி­றார்கள்.

மக்கள் வீட்டை விட்டு வெளியே வரு­வ­தற்கு முன்­னரே சம்­பவ இடத்­திற்கு இறைத் தூதர் அவர்கள் சென்று வரு­கின்­றார்கள் என்றால் அவர்­களின் துணிவைச் சொல்ல இதை விட வேறு என்ன வாழ்­வியல் உதா­ரணம் தேவை…?

துணிந்து பேசிய தூதர்கள் பற்றி அல்­குர்ஆன்…
ஓர்மம் ஒரு முஸ்­லிமின் குணாம்­ச­மாக இருக்க வேண்டும் என்­பது இஸ்­லாத்தின் வேண்­டு­த­லாகும். இத்­த­கைய குணாம்­சத்தைக் கொண்­ட­வர்­களை அல்லாஹ் அல்­குர்­ஆனில் சிறப்­பித்துப் பேசு­கின்றான்.

“யூசுஃப் (அலை) அவர்­களை தவ­றாக அடைய எகிப்து நாட்டு மன்­னரின் மனைவி எத்­த­னிக்­கிறாள். அவர்கள் மறுத்து விடு­கி­றார்கள். வலுக்­கட்­டா­ய­மாக அடைய நினைத்த போது நடந்த நிகழ்வில் கையும் கள­வு­மாக மாட்டிக் கொண்ட மன்­னரின் மனைவி குற்­றத்தை அப்­பாவி யூசுஃப் (அலை) அவர்கள் மீது போடு­கிறாள். “உம்­மு­டைய மனை­விக்கு தீங்கு செய்ய நினைத்­தவன் சிறை­வாசம் செல்ல வேண்டும். அல்­லது கடும் தண்­ட­னைக்கு ஆளாக வேண்டும்” (அல்­குர்ஆன் : 12:25) என்று கடுந் தொனியில் மன்­ன­ரான தன் கண­வ­னிடம் முறை­யி­டு­கிறாள். 

இக்­கட்­டான இந்த தரு­ணத்தில் எதிர்த்து நிற்­பது ஆபத்­தா­னது. என்­றாலும் மௌனி­யாக இருப்­பது  பேரா­பத்­தா­னது என உணர்­கி­றார்­கள் தாம் தன்னந் தனி­யாக இருக்­கிறோம். மன்­னரும், மனை­வியும் நினைத்தால் எதுவும் செய்து விடு­வார்கள் என்று எண்ணி கை கட்டி, வாய் பொத்தி, தலை குனிந்து யூசுஃப் (அலை) அவர்கள் நிற்­க­வில்லை. நெஞ்சை நிமிர்த்தி, துணிச்­ச­லாக நடந்­ததை சொல்­கி­றார்கள். “உங்கள் மனை­வி­யான இந்தப் பெண்தான் அவ­ளு­டைய விருப்­பத்­திற்கு இணங்­கு­மாறு என்னை அழைத்தாள்”. (அல்­குர்ஆன் : 12 : 26)

“நூஹ் அலை­ஹிஸ்­ஸலாம் தொள்­ளா­யி­ரத்து ஐம்­பது ஆண்­டுகள் தஃவாப் பணி செய்­கி­றார்கள். மிக சொற்­ப­மா­ன­வர்­கள்தான் இஸ்­லாத்தை ஏற்றுக் கொள்­கி­றார்கள். மனைவி, மகன் போன்ற நெருங்­கி­ய­வர்­களும் ஏற்றுக் கொள்ள மறுத்து விடு­கின்­றனர். இந்­நி­லையில் அந்தக் கூட்­டத்­தாரை அல்லாஹ் அழிக்க முடிவு செய்து விடு­கின்றான். வெள்­ள­மாக வரப் போகும் அந்த அழி­வி­லி­ருந்து தங்­களை தற்­காத்துக் கொள்ள கப்பல் கட்­டு­மாறு அல்லாஹ்வின் கட்­டளை.

நூஹ் அலை­ஹிஸ்­ஸலாம் அவர்கள் கடலே இல்­லாத அந்த பூமியில் கப்பல் கட்­டு­வதைப் பார்த்த அந்த இறை நிரா­க­ரிப்­பா­ளர்கள் பரி­காசம் செய்­கின்­றார்கள். அவர்கள் பெரும் கூட்­டத்­தினர். மிகவும் சொற்­ப­மா­ன­வர்­கள்தான் நூஹ் நபி­யோடு இருந்­தனர். இருந்­தாலும் அவர்கள் அஞ்­ச­வில்லை. தலை குனிந்து மௌனி­யாக இருக்­க­வில்லை.

“அவ­ரு­டைய சமூ­கத்­தாரின் பிர­தா­னிகள் அதன் சமீ­ப­மாகச் சென்ற போதெல்லாம் அவரைப் பரி­க­சித்­தனர். அதற்­கவர், “நீங்கள் எங்­களை பரி­காசம் செய்­கி­றீர்­களா! நிச்­ச­ய­மாக நாங்­களும் நீங்கள் பரி­காசம் செய்­ததைப் போன்று உங்­களை பரி­க­சிப்போம்” (அல்­குர்ஆன் - 11:38) என பதி­ல­ளிக்­கி­றார்கள்.
“லூத்” தையும் (நம்­மு­டைய தூத­ராக அவ­ரு­டைய சமூ­கத்­தா­ருக்கு நாம் அனுப்பி வைத்தோம்.) அவர் தம் சமூ­கத்­தா­ரிடம், “மானக்­கே­டா­ன­தொரு காரி­யத்தை நீங்கள் செய்­கின்­றீர்­களா? அகி­லத்­தாரில் எவரும் அதை இதற்கு முன்னர் செய்­த­தில்லை”

நிச்­ச­ய­மாக நீங்கள் பெண்­களை விட்டு விட்டு ஆண்­க­ளிடம் காம இச்­சையை தணித்துக் கொள்ள வரு­கின்­றீர்கள், மாறாக நீங்கள் மிக்க வரம்பு மீறிய சமூ­கத்­த­வ­ரா­கவே இருக்­கின்­றீர்கள்” (என்று கூறினார்). (அல்­குர்ஆன் : 7 : 80,81)

மானக்­கே­டான செயல்­களில் மூழ்கிப் போயி­ருந்த தன் சமூ­கத்­தாரை விளித்து லூத் அலை­ஹிஸ்­ஸலாம் அவர்கள் சொன்ன நெஞ்­சு­ர­மிக்க வார்த்­தைகள்.

“நான்தான் உங்­களின் மிக உயர்ந்த இரட்­சகன்” என்று மார்­தட்டிக் கொண்டு கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்­டி­ருந்த ஃபிர்அவ்ன் மூஸா நபியைப் பார்த்து “மூஸாவே! நான் உம்மை சூனியம் செய்­யப்­பட்ட ஒரு­வ­ரா­கவே எண்­ணு­கிறேன்.” என்று கூறிய போது “ஃபிர்­அவ்னே! நான் உன்னை, அழிக்­கப்­ப­டு­பவன் என்றே எண்­ணு­கின்றேன்” என்று பதி­ல­ளிக்­கி­றார்கள். (அல்­குர்ஆன் : 17 : 101,102)

கொடுங்­கோலன் ஃபிர்­அவ்னின் இரத்தம் எப்­படிக் கொதித்­தி­ருக்கும். அவ­னது கொடு­மை­களும் கொட்­டங்­களும் கொஞ்­ச­நெஞ்­ச­மல்ல… அவை மூஸா நபிக்கு தெரி­யா­த­வை­யு­மல்ல...

அனைத்­தையும் அறிந்­தி­ருந்த மூஸா அலை­ஹிஸ்­ஸலாம் அவர்கள் அவ­னுக்கு சொல்ல வேண்­டி­யதை சொல்ல வேண்­டிய தரு­ணத்தில் முகத்­துக்கு நேரே சொல்­லி­வி­டு­கி­றார்கள்.

ஒரு இறை விசு­வா­சி­யிடம் இந்த ஓர்மம் இருக்க வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான்  அல்லாஹ் மேற்­கண்ட நபி­மார்­களின் துணிச்­சல்­மிக்க வீர வாக்­கி­யங்­களை அல்­குர்­ஆனில் பதிவு செய்­கின்றான்.

நமது பொறுப்­பென்ன…?

சம­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான கெடு­பி­டிகள் உச்­சத்தை தொட்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக நாம் வாழும் இந்த இலங்கை நாட்டில் பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த சில இன­வா­தி­களின் நச்சுக் கருத்­துக்கள் அந்த சமூ­கத்தில் தாக்கம் செலுத்த துவங்­கி­யுள்­ளன என்­பதை கடந்து போன கண்டிக் கல­வரம் அபாய சமிக்ஞை ஒன்றை விட்டுச் சென்­றுள்­ளது. 
சிங்­க­ள­வர்­க­ளுக்­காக தயா­ரிக்­கின்ற உள்­ளா­டை­க­ளிலும், உண­வு­க­ளிலும் கர்ப்பத் தடையை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­வைகள் சேர்க்­கப்­ப­டு­வ­தா­கவும், உணவுப் பொருட்­களில் மூன்று முறை துப்பி விட்­டுத்தான் முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­க­ளுக்கு உண­வ­கங்­களில் உணவு பரி­மா­று­வ­தா­க­வும் போலி­யான குற்­றாச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. ஐந்து, ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்­னி­ருந்தே சொல்­லப்­பட்டு வந்த முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் இவ்­வா­றான கருத்­துக்­க­ளுக்கு முஸ்லிம் தரப்­பி­லி­ருந்து பதில் சொல்ல, பொறுப்­பு­வாய்ந்த எந்­த­வொரு சாராரும் முன்­வ­ராத அல்­லது கண்டு கொள்­ளாமல் விட்­டதன் விளைவை நாம் இப்­போது மெல்ல மெல்ல அனு­ப­விக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்றோம் என்­றுதான் எண்ணத் தோன்­று­கி­றது.

வீரமும், துணிவும் முஸ்­லிம்­களின் அணி­க­லன்­க­ளாக இருக்க வேண்டும் என்­ப­தற்­காக கருத்துச் சொல்ல வந்த தனித்த ஒரு சிலரை கூட்­ட­மாக தாக்­கி­விட்டு  வீறாப்பு பேசு­வ­துதான் துணிச்சல் என்று இடக்கு முடக்­கான புரி­தல்­க­ளுக்கு நாம் அகப்­பட்டு விடக் கூடாது. அதுதான் பச்சைக் கோழைத்­த­ன­மான செயல். அப்­ப­டித்தான் எம்மில் பலர் நடந்து கொள்­கி­றார்கள். வீரத்தை புரிந்தும் வைத்­தி­ருக்­கி­றார்கள்.

நமக்­கெ­தி­ராக சொல்­லப்­ப­டு­கின்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அந்­தந்த சந்­தர்ப்­பத்தில் தக்க பதில் கொடுக்க வேண்டும். அதைத்தான் நபி­மார்­களின் மேற்­கண்ட சம்­ப­வங்­க­ளி­லி­ருந்து நாம் புரிய வேண்­டி­யி­ருக்­கி­றது.

நம் மீது யார் எதை வேண்­டு­மா­னாலும் சொல்­லி­விட்டுப் போகட்டும். அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று கையா­லா­காத்­த­ன­மாக இருந்­து­விட்டு விமர்­ச­னங்கள் விப­ரீ­த­மான கட்­டத்தை அடை­கின்ற போது குனூத்­துக்­குள்ளும் ஃபிக்ஹுல் அகல்­லிய்­யாத்­துக்­குள்ளும் முஸ்லிம் சமூ­கத்தை முடக்கிப் போட நினைப்­பது முதிர்ச்­சி­யான செய­லல்ல.

இன்னும் ஒரு சாரார் நம் சமூ­கத்தில் பர­வ­லாக இருக்­கி­றார்கள். தெளி­வான அல்­குர்ஆன், அஸ்­ஸுன்­னாவின் படி வாழ்வோம் வாருங்கள் என்­ற­ழைப்­போரை இஸ்­லாத்தின் பரம எதி­ரி­க­ளாகப் பார்ப்­ப­வர்கள். பாரம்­ப­ரிய இஸ்­லாத்­தைத்தான் நாங்கள் பின்­பற்­றுவோம் என்று சொல்லிக் கொண்டு பாட்டன், பூட்டன் இஸ்­லாத்தின் பெயரால் உரு­வாக்­கி­ய­வற்றை உடும்புப் பிடி­யாக பிடித்துக் கொண்­டி­ருப்­பார்கள்.
இவர்கள் தங்­களை இஸ்­லாத்தின் காவ­லர்­க­ளா­கவும் பிறரை காவா­லி­யா­கவும் நினைப்­ப­வர்கள். மாற்றுக் கருத்துக் கொண்­ட­வர்­களை மதிக்கத் தெரி­யா­த­வர்கள். கருத்­துக்­களை கருத்தால் எதிர் கொள்­வ­தற்கு திரா­ணி­யற்­ற­வர்கள். எதற்­கெ­டுத்­தாலும் அடி தடி என்று இறங்­கு­ப­வர்கள்.

 18 பள்­ளி­வா­சல்கள், நூற்றுக்கணக்­கான முஸ்­லிம்­களின் வீடுகள், பெரு­ம­ள­வான வர்த்­தக நிலை­யங்கள், வாக­னங்கள் என முஸ்­லிம்­களின் சொத்­துக்­களை கொள்­ளை­யிட்டு, தீக்­கி­ரை­யாக்கி விட்டு இன­வா­திகள் போகும் வரை வாளாவிருந்தார்கள்.

கல­வ­ரத்தில் ஈடு­ப­டு­வர்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் அவர்­களை எதிர்கொள்­வ­தற்கும் அவர்கள் பயன்­ப­டுத்தும் பொல், தடி மற்றும் கற்கள் போன்ற ஆயு­தங்­களை பயன்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர­சியல் யாப்பு சட்ட விதி­களில் எங்­க­ளுக்கும் அனு­மதி இருந்தும் களத்­திற்கு எவரும் வர­வில்லை. கல­வ­ரத்தில் உயி­ரி­ழந்த சகோ­த­ரனின் ஜனாஸா விட­யத்தில் மட்டும் முந்­திரிக் கொட்டை மாதிரி முந்தி வந்து அதை நாங்கள் பெரும்­பான்மை ஜமா­அத்­தாரின் விருப்­பத்­திற்கு ஏற்­பதான் நடாத்தி முடிப்போம் என ஊர்த் தலை­மைகள் வீறாப்பும் வீரமும் பேசி­யி­ருக்­கி­றார்கள்.

நெருக்­க­டி­யான நேரங்­களில் பொறுப்­பு­வாய்ந்­த­வர்கள் முன்­வ­ராத பட்­சத்தில் பொறுப்­பற்ற இளை­ஞர்கள் முன்­வ­ரு­வதை தடுக்க முடி­யாமல் போய்­விடும். அப்­படி அவர்கள் களத்­துக்கு வந்தால் இன­வா­திகள் எதிர்­பார்த்­ததை இல­கு­வாக அடைந்து கொள்­வார்கள்.

முஸ்­லிம்­களை சீண்டி அவர்­களை ஆயுதம் ஏந்த நிர்ப்­பந்­திக்க வேண்டும். இலங்கை முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளாக சர்­வ­தேசம் பிர­க­டனம் செய்யும். அதன் பிறகு என்ன…? இலங்கை, முஸ்­லிம்­க­ளுக்கு மற்­று­மொரு மியன்­மா­ராக மாறும். (நஊது பில்­லாஹி மின்ஹா) இதுதான் இன­வா­திகள் எதிர்­பார்ப்­பது.

குட்ட குட்ட குனிந்து போகவும் கூடாது. குட்­டு­கி­றார்கள் என்­ப­தற்­காக புத்­தியை குத்­த­கைக்கு கொடுத்­து­விட்டு ஓவ­ராக குதிக்­கவும் கூடாது. இரண்­டுக்­கு­மி­டையில் நடு நிலை­யான ஒரு போக்கை கடைப்­பி­டிக்க வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும்.

நெருக்­க­டி­யான நேரங்­களில் ஹுதை­பியா உடன்­ப­டிக்­கையின் அணு­கு­மு­றைகள் முன்­னு­தா­ர­ண­மாகக் கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யவை.

1.“நாங்கள் யுத்தம் செய்­வ­தற்கு வர­வில்லை. உம்ரா கிரியை நிறை­வேற்­றத்தான் வந்­துள்ளோம்” என்று உதுமான் (ரழி) அவர்­களை தூது­வ­ராக அனுப்பி கூறப்­பட்­டதன் மூலம் எதி­ரி­க­ளிடம் பொய்­யான வதந்­திகள் பர­வாமல் தடுக்­கப்­ப­டு­கின்­றது. நோக்கம் தெளி­வாகச் சொல்­லப்­பட்­டதால் வீணான சந்­தே­கங்­களும் களை­யப்­ப­டு­கின்­றன.

2.‘முஹம்­மது ரஸு­லுல்லாஹ்’­என்று எழு­தப்­பட்ட உடன்­ப­டிக்­கையில் ரஸு­லுல்லாாஹ் என்ற வார்த்­தையை எடுத்­து­விட வேண்டும் என்று மக்கா முஷ்ரிகுகள் வேண்டிக் கொள்­கி­றார்கள். உடன்­ப­டிக்­கையை எழு­திய அலி (ரழி) அவர்கள் உடன்­படா விட்­டாலும் நபி (ஸல்) அவர்கள் அதை அழித்து விடு­கி­றார்கள். சாத்­தி­ய­மா­ன­வற்றில் விட்டுக் கொடுப்­பதில் தப்­பில்லை.

3. தூது­வ­ராகச் சென்ற உதுமான் (ரழி) அவர்கள் கொலை செய்­யப்­பட்டு விட்­டார்கள் என்ற செய்தி பர­வு­கி­றது. அப்­போது நபி (ஸல்) அவர்கள் தீர்க்­க­மான ஒரு முடி­வுக்கு வரு­கி­றார்கள். உதுமான் கொல்­லப்­பட்டால் அதற்கு பழி வாங்­கு­வ­தற்­காக உயி­ருள்­ள­வரை போரா­டுவோம். அதற்கு ஸஹா­பாக்கள் எல்­லோரும் ஏகோ­பித்து பைஅத் செய்­கி­றார்கள்.

   கல­வ­ர­மான சூழல் ஏற்­ப­டு­கின்ற போது தலை­மைத்தும் தாம­திக்­காது தீர்க்­க­மான ஒரு முடி­வுக்கு வர­வேண்டும். அது போல மக்­களும் அதற்கு முழு­மை­யாக கட்­டுப்­பட வேண்டும். நெருக்­க­டி­யான நேரங்­களில் வதந்­திகள் பரவும். கேள்­விப்­பட்­ட­தை­யெல்லாம் நம்பி விடவும் கூடாது. மக்கள் மத்­தியில் பரப்­பவும் கூடாது.
4. இந்த முறை உம்ரா செய்ய முடி­யாது. அடுத்த வருடம் வாருங்கள் என்று எதி­ரிகள் தரப்பில் நிபந்­த­னை­யி­டப்­ப­டு­கி­றது. முஸ்­லிம்­களில் பலர் கொதித்துப் போகி­றார்கள். தலை­மைத்­துவம் தூர நோக்­கோடு அங்­கீ­க­ரிக்­கி­றது. அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்குள் மக்­கா­வையே வெற்றி கொள்ள முடி­கி­றது. தூர நோக்கும் தூய எண்­ணமும் வெற்­றிக்கு வழி மாத்­தி­ர­மல்ல அவ­சியம் என்­ப­தையும் உணர்த்தி நிற்­கின்­றது.

5. ஹி. 2இல் இடம்­பெற்ற பத்ர் களத்தில் 300 பேர்தான் முஸ்­லிம்கள் தரப்பில். எதி­ரிகள் இதை விட மும்­ம­டங்கு அதிகம். ஆனாலும் முஸ்­லிம்கள் பின்­வாங்­க­வில்லை. ஹி. 3இல் நடந்த உஹ்த் யுத்தத்தில் சுமார் 700 பேர்தான் முஸ்லிம்கள். எதிரிகள் மூவாயிரம் பேர். முஸ்லிம்கள் எதிரிகளை களத்தில் சந்திக்கிறார்கள். ஆனால் ஹி. 6இல் இடம்பெற்ற ஹுதைபியா உடன்படிக்கை சமயத்தில் சுமார் 1400 பேர் முஸ்லிம்கள். பலம் பொருந்திய அணியாக ஸஹாபாக்கள் இருக்கிறார்கள். சொற்பமானவர்களாக இருக்கும் சமயத்தில் யுத்தம் செய்தவர்கள் ஆளணி அதிகம் இருந்த நேரத்தில் அதற்கு விரும்பவில்லை. இரத்தம் சிந்திப் பெற முடியாதவற்றை விட்டுக் கொடுப்பின் மூலம் பெற முடியும் என்ற சாத்தியமிருந்தால் அதைத்தான் தலைமைத்துவம் தேர்வு செய்ய வேண்டும். விட்டுக் கொடுத்தார்கள். ஹி. 08இல் மக்காவையே வெற்றி கொண்டார்கள்.

முடியுமானவற்றில் விட்டுக் கொடுப்புக்கள் அவசியம். சமூக நல்லிணக்கத்திற்கும் சுமுக வாழ்விற்கும் அது அடித்தளமிடும். இதை சில ஃபேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் போராளிகள் வேண்டுமானால் காட்டிக் கொடுப்பதாகவும் கூட்டிக் கொடுப்பதாகவும் கொக்கரிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களின் அதிருப்தியை இவ்வாறான நேரங்களில் கண்டு கொள்ளவே இல்லை.

வெள்ளை ஜுப்பாக்களும் கறுப்பு அபாயாக்களும் ஹலால் சான்றிதழ்களும் இனவாதிகளின் நச்சுக் கருத்துக்களுக்கு தீனி போடக் கூடிய ஒன்றாக இன்றைய நாட்களில் அதிகம் இருக்கிறது.

முடியுமானவற்றில் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்வது காலப் பொருத்தம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
ஆடைகளுக்கு வரையறை உண்டு. வடிவம் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தனித்துவம் பேணுகிறோம் என்று சொல்லிக் கொண்டு தனித்து வாழக் கூடாது. கலந்து வாழ்வோம் என்ற அடிப்படையில் கரைந்து போய் விடவும் கூடாது. இரண்டுக்கும் இடையில் நிதானமான போக்கும் தீர்க்கமான முடிவுகளும் காலத்தின் கட்டாயம்.

எதுவும் காலம் கடந்துவிடவில்லை. ஆனால் இன்னும் காலம் கடத்தக் கூடாது…

1 comment:

Powered by Blogger.