Header Ads



கல்வியில் சாதனை - காதலில் தோல்வி: மாணவி தற்கொலை

களுத்துறையில் பல்கலைக்கழத்திற்கு தெரிவான மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அழுத்கம, தர்காநகரத்தின், மாலேவனவில பிரதேசத்தை சேர்ந்த தசுனி தருஷிகா என்ற 20 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த மாணவி கடந்த வருடம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் சித்தியடைந்து களுத்துறை மாவட்டத்தில் 61 வது இடத்தை பிடித்துள்ளார்.

காதல் தொடர்பு முறிந்தமையே இதற்கு காரணமாக இருக்கலாம் என பெற்றோர் சந்தேகிக்கின்றனர்.

பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி வழங்காமல் பரீட்சையில் சித்தியடைய மாத்திரம் கற்று கொடுப்பதாக நீதவான் நிஹால் பெற்றோருக்கு மரண விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் எனது மகள் களுத்துறை மாவட்டத்தில் 61வது இடத்தை பிடித்தார். அவரது பெறுபேறுகளை பார்த்து நாம் மிகவும் மகிழச்சியடைந்தோம். அவர் பல்கலைக்கழகம் செல்ல எதிர்பார்த்திருந்தார் என உயிரிழந்த மாணவியின் தாயார் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எனது மகளுக்கு பாடசாலை காலத்தில் அல்லது அதற்கு பின்னர் மேலதிக வகுப்பு செல்லும் போது காதல் தொடர்பு இருந்ததாக எங்களுக்கு தெரியாது. எனினும் காதல் தொடர்பில் ஏற்பட்ட பிரிவினால் இன்று மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மகிழ்ச்சியில் புதிய ஆடைகளை கொள்வனவு செய்து வந்திருந்தார். நான் இரண்டு மகளை மேலதிக வகுப்பிற்கு அழைத்து செல்லும் போது, மூத்த மகள் மாத்திரமே வீட்டில் இருந்தார்.

நான் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது மகள் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார். அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு மகளை கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாணவி தற்கொலை செய்து கொண்டதாக மரண விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.