நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளித்தமை குறித்து ஜனாதிபதி மகிழ்ச்சி - டிலான் பெரேரா
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாக வாக்களித்தமை குறித்து ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று -05- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவி விலக வேண்டுமென கட்சி ஏகமனதாக தீர்மானித்திருந்தது. இந்த தீர்மானத்தை அறிவித்தோம், பிரதமர் பதவி விலகாத காரணத்தினால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்.
இதேவேளை, கட்சியின் உத்தியோகபூர்வ தீர்மானம், நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது அவையில் பிரசன்னமாகாதிருக்க வேண்டுமென்பதல்ல.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையினால் வேறு கட்சிகளுக்கு செல்வதாக அர்த்தப்படாது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
Post a Comment