வட்சப் ஊடாக இலங்கையிலிருந்து, ஆயுதங்கள் கடத்த முயற்சி
இலங்கையிலிருந்து நாட்டு துப்பாக்கிகளை தயாரித்து தமிழகத்திற்கு கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழக பொலிஸாரை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தமிழகம் - ராமநாதபுரம் பகுதியில் வன்முறைகளை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த நபர்கள் இலங்கையிலிருந்து நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்து தமிழகத்திற்கு கடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக மண்டபம் முகாமில் உள்ள இலங்கை அகதி ஒருவரை நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குழுவினர் whatsapp சமுக வலைத்தளத்தை அடிப்படையாக கொண்டு செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் எட்டு பேர் தேடப்பட்டு வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யா அல்லாஹ் இந்த பைத்தியகாற செய்தியில் முஸ்லீம்களின் பெயெர்கள் கலந்துவிடாமல் பாதுகாப்பாயாக...
ReplyDelete