Header Ads



அரச நிர்வாகம் கற்க, சீனாவுக்குப் பயணமானார் கோத்தா

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று முன்தினம் அதிகாலையில் சீனாவுக்குப் பயணமாகியுள்ளார்.

சீனாவின் யுனான் பல்கலைக்கழகத்தில் அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார முகாமைத்துவ கற்கைநெறி ஒன்றைத் தொடர்வதற்காகவே, கோத்தாபய ராஜபக்ச சீனா சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

சீனாவின் பல்கலைக்கழகம் ஒன்றில் மூன்றாண்டு அரசியல் கற்கைநெறி ஒன்றைக் கற்பதற்கு கோத்தாபய ராஜபக்சவுக்கு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், யுனான் பல்கலைக்கழகத்தில் கோத்தாபய ராஜபக்ச தொடரவுள்ள கற்கைநெறி எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

2 comments:

  1. சிங்கப்பூர் நாட்டவனைக் கொண்டுவந்து நாட்டின் செல்வம் சொத்துக்களை அவனுடைய கஸானாவில் நிரப்பும் வரை பார்த்து ஏமாந்து போன மக்கள் மற்றொரு அமெரிக்க காரனிடம் ஒப்படைத்து அதைவிட மோசமான அழிவுக்கு அவர்களையும் அவர்களின் பரம்பரையையும் பலிகடாவாக ஆக்க நிச்சியம் இந்த நாட்டுமக்கள் தயாராக இல்லை என நாம் நிச்சியமாக நம்புகிறோம்.

    ReplyDelete
  2. சீனா இன்று பௌத்தத்தை வளர்க்கின்ற,அதற்காக எந்த மத்த்தையும் பலி தீர்க்க முனையும் நாடு.

    அதனை இலங்கையிலும் வேகமாக அமுலாக்க தேவையான நபரை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

    2020ல் ஆட்சியை இலங்கையில் கைப்பற்றுவதற்கான அனைத்து உபாயங்களைக கற்ப்பிக்கவும், அதற்காக அனுசரணை வழங்கவும் அழைத்துள்ளார்கள்

    ReplyDelete

Powered by Blogger.