ரணில் வெற்றிபெறுவார் - பிரதமர் பதவியிலும் தொடருவார்
தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றிப்பெறுவார் என ஊடகங்கள் எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளன.
அந்த வகையில் குறித்த பிரேரணையிலிருந்து ரணில் விக்ரமசிங்க தப்பித்துக் கொள்வார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தலையங்கம் தீட்டியுள்ளது.
இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் அல்லது வாக்களிப்பை தவிர்க்கலாம்.
எனினும் பொது எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை இது தோல்வியுற செய்யும் என்றும் ஆங்கில ஊடகம் கூறுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இந்தப் பிரேரணை தொடர்பில் ஏற்பட்டுள்ள மாறுப்பட்ட கருத்துக்கள் அல்லது பிளவும் கூட ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றிவிடும் என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் விருப்போ அபிமானமோ இல்லாத ஒரு பிரதமர். அவர் வெற்றியடைவதும் தோல்வியடைவதும் நாட்டுக்கு நன்மையில்லை. தோல்வியடைவதால் நன்மையில்லை ஏனெனில் இன்னும் 30வருடகாலத்துக்கு நாட்டைச் சூறையாடி அழிக்கும் ஏற்பாட்டைச் செய்துவிட்டுத்தான் போகிறான். அதற்கு கூலி கொடுக்க மிகவும் தகுதிவாய்ந்தவன் அல்லாஹ்மாத்திரம் தான்.
ReplyDelete