சாரதியின் சமயோசிதம் - 70 மாணவர்கள் உயிர் தப்பினர்
ஆபத்தான சமயத்தில் சமயோசிதமாக செயற்பட்ட சாரதி ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
பாடசாலை மாணவர்கள் ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பீதுருதாலகால மலை உச்சியில் பயணிக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்படவிருந்த பாரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டமையினால் செல்ல வேண்டிய திசைக்கு பேருந்தை திருப்பாமல் வேறு திசைக்கு திருப்புவதற்கு சாரதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அதே பக்கத்தில் பேருந்து திருப்பப்பட்டிருந்தால் பேருந்து பின் பக்கமாக சென்று பாரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சாரதியின் திறமையினாலேயே இந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் ஏற்படும் போது பாடசாலை மாணவர்கள் 70 இருந்துள்ளனர்.
நுவரெலியா போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகவிருந்தது.
அதிக உயர் மலையில் அதிக மாணவர்களை ஏற்றி செல்வதன் ஆபத்து குறித்து பாதுகாப்பு பிரிவினரின் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment