Header Ads



6 சு.க. அமைச்சர்களை உடனடியாக நீக்கு - 33 ஐ.தே.க. Mp கள் நள்ளிரவில் கடிதம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆறு அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை பிரதமருக்கு கையளித்துள்ளனர்.

இதன்படி, அமைச்சர்களான எஸ்.பி. திஸ்ஸாநாயக்க, ஜோன் செனவிரட்ன, அநுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரகொடி மற்றும் தாயசிறி ஜயசேகரவை அமைச்சு பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாடாளுமன்றில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும், எதிராக 122 பேரும் வாக்களித்திருந்தனர்.

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 76 பேரில் மேற்கூறிய அமைச்சர்களும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. Mokka Akan,First know who all vote in support from government.read properly and come man ..

    ReplyDelete
  2. Min Hisbullah didn't vote

    ReplyDelete
  3. ஏன் இவருக்கு எதிரா வாக்களித்தவர்களை விளக்க வேண்டும்??ஜனநாயகமென்றால் கருத்து சுதந்திரம் அவரவரின் கொள்கை ரீதியில் வித்தியாசம் இருக்கும் அப்படியில்லாமல் தலைவர் சொல்லுவது தான் ஆமா என்று தலையாட்டினால் அது சர்வாதிகார ஆட்சியே!!

    ReplyDelete

Powered by Blogger.