ஹூலு கங்கையில் நீராடிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்
கண்டி – பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கையில் நீராடிய ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாவலி கங்கையுடன் இணையக் கூடிய ஹூலு கங்கையில், களு பாலத்திற்கு அருகில் மூன்று பெண்கள் உட்பட 05 பேர் இன்று மாலை நீராடிக் கொண்டிருந்த வேளை குறித்த ஐந்து பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர்; மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நான்கு பேரின் சடலதை்தை மீட்டெடுத்துள்ளனர். அத்துடன் காணாமல் போயுள்ள ஒருவாரின் சடலத்தை தேடும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment