சிராஜ் நகரில் 4 பேரை, காயப்படுத்திய கரடி சுட்டுக்கொலை
கந்தளாய் 97 - சிராஜ் நகர் பகுதியில் கரடியொன்று இரண்டு வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதலில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
பின்னர் கரடியை கட்டுபடுத்த வந்த கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் மீதும் அந்த கரடி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இதன்போது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கரடி உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரும் கந்தளாய் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கரடி பல முறை இவ்வாறு கிராமவாசிகள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Did the bare came on its own or somebody left it for any reason? find how it came?
ReplyDelete